திருவள்ளூரில் திருத்தணி பழைய பஸ் ஸ்டாண்டில் பாருங்க? கமிஷனர் அதை சொன்னதுமே மக்கள் ஷாக்
திருவள்ளூர்: திருத்தணி பழைய பேருந்து நிலையம் முழுமையாக மூடப்படுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்ததை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த அதிரடி முடிவால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் வியாபாரிகள், கமிஷனர முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முழுமையான விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்..!
திருத்தணி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கவும் திருத்தணி-அரக்கோணம் சாலையில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

திருத்தணி பழைய பேருந்து நிலையம்
இந்த புதிய பஸ் ஸ்டாண்டு கடந்த மாதம் 4-ம் தேதி திறக்கப்பட்டு, மார்ச் 30-ம் தேதி முதல் பேருந்துகள் முழுமையாக இயங்கத் தொடங்கின. இருப்பினும், பழைய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து நிகழ்ந்த சில செயல்பாடுகளால் தற்போது அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும், பல தனியார் பேருந்துகள் தொடர்ந்து பழைய புதிய பஸ் ஸ்டாண்டிலேயே தங்கி நின்று பயணிகளை ஏற்றி வந்தன. இதனால் புதிய புதிய பஸ் ஸ்டாண்டு அதன் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை.
புது பஸ் ஸ்டாண்டு
குறிப்பாக, தனியார் பேருந்துகள் பழைய நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது ஒருபுறமிருக்க, பெரும்பாலான பயணிகள் பழைய நிலையத்திலேயே காத்திருந்ததால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் அரசு பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர், நகராட்சி ஆணையர் கன்னியப்பனிடம் முறையான புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் கன்னியப்பன் நேற்று முன்தினம் பழைய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சி ஊழியர்களுக்கு
அப்போது அங்கு விதிகளை மீறி நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை உடனடியாக எடுக்குமாறு ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக மூடுவதற்கு நகராட்சி ஊழியர்களுக்கு ஆணையிட்டார். இனி வரும் காலங்களில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்காது என்றும், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் திடீரென ஆணையர் கன்னியப்பனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் வெடித்தது.
பயணிகள் வாக்குவாதம்
"அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து நின்று செல்ல வேண்டும்; அப்போதுதான் எங்களுக்கு வசதியாக இருக்கும்" என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றுவதில் காட்டும் அடாவடித்தனம் குறித்தும், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் அவர்கள் ஆணையரிடம் ஆவேசமாக முறையிட்டனர்.
பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து விளக்கமளித்த ஆணையர், தனியார் பேருந்துகள் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு உடனடியாக ஏற்றிச் செல்லலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அங்கு பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த முற்றுகை போராட்டம் மற்றும் வாக்குவாதம் காரணமாக திருத்தணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் கடும் பரபரப்பு நிலவியது. ஆனால் இப்போது நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவால், பயணிகள் அனைவரும் இனி புதிய பேருந்து நிலையத்தையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம்...!!
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications