24 வயசு தான் ஆகுது.. திருவள்ளூர் பெரியபாளையத்தில் தடுமாறிய வினோதினி.. பக்கத்து வீட்டு பையன் மிஸ்ஸிங்
திருவள்ளூர்: நாளுக்கு நாள் பெண்களும் போக்சோவில் கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த கைது சம்பவங்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருவது அதற்கு மேல் கலக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன. நேற்றுகூட ஒரு பெண் திருவள்ளூரில் கைதாகி உள்ளார்.
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அட்டூழியங்கள் பெருகி கொண்டே வருகின்றன.. அதேபோல, ஆண் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொண்டே போகின்றன.. சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக்காகவே போக்சோ சட்டங்கள் அமலில் இருந்தபோதும், இந்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

கன்னியாகுமரி: நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஒரு கொடுமை நடந்தது.. பேத்திமுறை கொண்ட 14 வயது சிறுமிக்கு, புதுடிரஸ் வாங்கி தருவதாக பைக்கில் ஏற்றி கொண்டு சென்று, பாலியல் அட்டகாசம் செய்திருக்கிறார் அவரது தாத்தா.. இப்போது அவர் போக்சோவில் கைதாகி உள்ளார்.
அதேபோல, உடன்பிறந்த தன்னுடைய 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.. செல்போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
டியூஷன் டீச்சர்: இப்படி வயது வித்தியாசம் பாராமல் போக்சோவில் ஆண்கள் கைதாகி கொண்டிருந்தால், சில பெண்களும் போக்சோவில் கைதாவது கவலையையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது. டியூஷனுக்கு சென்ற 10 ம் வகுப்பு மாணவனை, டியூஷன் டீச்சரின் 23 வயது தங்கை காதலித்துள்ளார்.. அந்த சிறுவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்றுகூறி கடந்த வாரம், புதுச்சேரிக்கு அழைத்து சென்றுள்ளார். போலீசார் அந்த பெண்ணை போக்சோவில் கைது செய்தனர்.
இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னொரு பெண் சிக்கி உள்ளார். பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வினோதினி .. 24 வயதாகிறது.. இந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
11ம் வகுப்பு: இந்நிலையில் வினோதினி 11ம் வகுப்பு மாணவனிடம் நெருங்கி பழகியிருக்கிறார்.. மாணவனை ஆசை வார்த்தை கூறி காதலித்தும் வந்துள்ளார்.. பிறகு கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனிடையே, சிறுவனை காணாத பெற்றோர் இது தொடர்பாக பெரியபாளையம் போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. அப்போதுதான், சிறுவனை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்றது தெரிய வந்தது.
ஆசை வார்த்தை: இதனையடுத்து, அந்த பெண் எங்கிருக்கிறார் என்ற விவரத்தை டிரேஸ் செய்ய ஆரம்பித்தனர்.. இறுதியில், அந்த பெண் உள்ள பகுதிக்கே சென்று, பதுங்கியிருந்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. இளம்பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications