திருவள்ளூரில் ஒரே ஆச்சரியம்.. தெருவில் அதென்ன வெள்ளை கலர்ல? கிட்டபோய் பார்த்தால்? மிரண்ட செங்குன்றம்
திருவள்ளூர்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
வடதமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.. அதிலும் புறநகர் சென்னையில் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை.. எனவே, தேங்கியிருக்கும் வெள்ளநீர், கழிவுநீர்போல சாக்கடையாக மாறி வருகிறது.. இதனால் துர்நாற்றம் பலமாக வீசுகிறது..

காலி மனைகள்: காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. இதனால், கொசு உற்பத்தி அதிகமாவதுடன், தோல் நோய்கள், பூஞ்சை நோய்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் உட்பட எலி காய்ச்சல் வரை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால்தான், மாநகராட்சி முழுமூச்சாக நிவாரண பணிகளில் இறங்கி உள்ளது.. காய்ச்சலுக்கான தடுப்பு மாத்திரைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் போது பேரூராட்சி ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூவிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
செங்குன்றம்: அந்தவகையில், செங்குன்றம் பகுதியிலும் மழை வெள்ளம் கடுமையாக பாதிப்பை தந்துவிட்டது.. இதனால், இங்கு பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்படித்தான் நேற்றைய தினமும், இந்த பகுதியில் தெருக்களில் தேங்கியிருந்த குப்பைக்கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
குப்பைகளை அள்ளி போட்டுவிட்டு, பிளீச்சிங் பவுடர்களை சாலைகளிலும், தெருக்களிலும் தூவிவிடுவது வழக்கம்.. பிளீச்சிங் பவுடரை தூவினால், கொசுத்தொல்லை ஏற்படாது.. அத்துடன், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலும் இருக்காது.. அதனால்தான், செங்குன்றத்திலும் குப்பைகள் அள்ளப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. அனைத்து தெருக்களிலுமே தூய்மைப் பணியாளர்கள் கிளீனிங் பவுடரை கொட்டிவிட்டு சென்றதால் அப்பகுதி மக்களுக்கு ஒருவித நிம்மதி உணர்வு ஏற்பட்டது.
தூய்மை பணியாளர்கள்: ஆனாலும் செங்குன்றம், டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டார மக்களுக்கு மட்டும், ஏதோ ஒருவித சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது.. உண்மையிலேயே தூய்மை பணியாளர்கள் தூவிச் சென்றது, பிளீச்சிங் பவுடரா? வாடை எதுவும் அப்படி வரலையே? என்று சந்தேகத்திலேயே இருந்தனர்..
பிறகு ஒருகட்டத்தில், பொதுமக்களே நேரடியாக சென்று, ரோட்டோரம் தூவப்பட்டிருந்த பவுடரை கையில் எடுத்து பார்த்தனர்.. கையில் எந்தவிதமான உறுத்தலுமின்றி, "வழவழ"வென அந்த பவுடர் இருந்தால், சந்தேகம் மேலும் அதிகமானது. பிறகு அதை முகர்ந்து பார்த்தபோதுதான், அது மைதா மாவு என்று தெரியவந்தது.

மூட்டைகள்: பின்னர், தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர்.. அதற்குள் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி தயாரிக்கப்பயன்படுத்தப்படும் மைதா மாவு, பாக்கெட்களில் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர்..
இதுகுறித்து பொதுமக்கள், அவர்களிடம் விசாரித்தபோது, பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததை தான், தெருக்களில் தூவி வருகிறோம் என்றனர்.. பிளீச்சிங் பவுடருக்கு மாற்றாக, மைதா மாவு தெளித்த சம்பவம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மிகுந்த அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் உண்டுபண்ணி உள்ளது.
மைதா மாவு: இந்த மைதா மாவு பாக்கெட், மூட்டைக்குள் எப்படி வந்தது? தவறுதலாக மூட்டைக்குள் வந்துவிட்டதா? தெரிந்தே பாக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.. இதுகுறித்து இதுவரை, யாரும் விளக்கமும் தரவில்லை.. ஆனால், "மைதா மாவு" மட்டும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications