Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவரப்பேட்டை ரயில் விபத்து.. கழற்றப்பட்ட போல்ட்டுகள்? என்ஐஏ விசாரணையில் ’திடுக்’ தகவல்.. சதி வேலையா?

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தின் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மைசூர் தர்பாங்க இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் புறப்படும் இந்த ரயில் தமிழகம் வழியாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பீகார் மாநிலம் தர்பங்காவை சென்றடைகிறது.

nia thiruvallur train accident railway

தமிழகத்தில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணிக்கு பெரம்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது.

சிக்னல் கோளாறு காரணமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் இருந்து சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். மேலும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். சுமார் 3 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விபத்தில் சிக்கிய காயம் அடைந்த அனைவரும் உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அப்பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனித தவறு காரணமா அல்லது தொழில்நுட்ப தவறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகளும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே அதிகாரிகளிடம் விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சிக்னல் மாறி விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இதே போல பொன்னேரி ரயில் நிலையத்திலும் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் இதே போல ஜூலை 26, செப்டம்பர் 16, 21 ஆகிய தேதிகளிலும் தண்டவாளங்களில் போட்ட்டுகள் கழற்றப்பட்டுள்ள நிலையில் இது சதி வேலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த விசாரணை தொடர்பான அறிக்கை இன்னும் பத்து முதல் 15 நாட்களில் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது சதி வேலை காரணமா என்று கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+