Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொதிக்கிற ரசத்துல விழுந்ததும் என் புள்ளையின் வயிறு முழுசா வெந்துடுச்சே.. கதறி அழுத சதீஷின் தாய்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருமணத்தில் கேட்டரிங் வேலை பார்த்த போது கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவருடைய வயிறு, தொடை என அனைத்துமே வெந்துவிட்டதாக அவருடைய தாய் கதறி அழுதபடியே சொன்ன காட்சிகள் காண்போரை பதைபதைக்கின்றன.

ஏழை மற்றும் நடுத்தர வயதுடைய கல்லூரி மாணவர்கள் தாய், தந்தையரின் குடும்ப பாரத்தை குறைக்கவும் கல்லூரிக்கு கட்டணம் கட்டுவது, தம்பி, தங்கையை படிக்க வைப்பது, அக்கா, தங்கையை திருமணம் செய்து கொடுப்பது, தினந்தோறும் பாக்கெட் மணி உள்ளிட்டவைகளுக்காக கிடைக்கும் தொழில்களை செய்து வருகிறார்கள்.

What happened to the youth who fell in boiling rasam in marriage hall?

பீட்சா டெலிவரி செய்தல், உணவு டெலிவரி நிறுவனத்தில் பார்ட் டைம் வேலை பார்த்தல், மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் இடத்தில் பணியாற்றுதல், திருமணம் மற்றும் சுபவிஷேசங்களுக்காக கேட்டரிங் சர்வீஸில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் பணி செய்தல் உள்ளிட்டவைகளை செய்து தங்கள் பொருளாதார தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகிறார்கள்.

தற்போது கல்லூரிகள் காலை, மாலை என இரு வேளைகளாக பிரிக்கப்பட்டு படிப்பதால் கல்லூரி செல்லாத நேரங்களில் இந்த வேலைகளை செய்கிறார்கள். அந்த வகையில் குடும்பத்திற்கு கை கொடுக்க நினைத்த ஒரு இளைஞருக்கு அந்த வேலையே எமனாக மாறிவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரைச் சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் தனியார் கலைக் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் நேரம் தவிர்த்து பகுதி நேரமாக திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு உணவு பரிமாறும் கேட்டரிங் வேலைக்கு சதீஷ் சென்று வந்துள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது கை செலவை கவனித்து வந்துள்ளார்.

வழக்கம் போல் கடந்த 23 ஆம் தேதி கல்லூரிக்கு சென்று வந்த சதீஷ், அவருடைய நண்பர்கள் அழைத்ததன் பேரில் மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறச் சென்றுள்ளார். அப்போது சாம்பார் பரிமாறப்பட்ட நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் ரசம் கேட்டனர். சாப்பிட வந்தவர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காக வாளியுடன் சதீஷ் வேகமாக சமையலறைக்குள் ஓடினார்.

அப்போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்த நிலையிலும் கொதித்து கொண்டிருந்த அண்டாவில் ரசத்தை எடுத்த சதீஷ் திடீரென நிலைத்தடுமாறி கொதிக்கும் அண்டாவில் விழுந்துவிட்டார். இதையடுத்து அவருடைய அலறல் சப்தம் கேட்ட நண்பர்கள் ஓடி வந்து சதீஷை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சதீஷ் சேர்க்கப்பட்டார்.

அங்கு 6 நாட்கள் சதீஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 30 ஆம்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சதீஷின் தாயிடம் கேட்ட போது, என் மகன் பிசிஏ படித்துவந்தார்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நண்பர்கள் அழைப்பின் பேரில் பார்ட் டைம் வேலைக்கு செல்வார். அது போல்தான் மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்திலம் வேலைக்கு சென்றார். அப்போது ரச அண்டாவில் தவறி விழுந்தார். என் மகனின் வயிறு, தொடை எல்லாம் வெந்துவிட்டது. இப்படி என்னை தவிக்க விட்டுவிட்டு போய்விட்டானே என கதறி அழுதார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+