Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்துக்கு வந்த நிலைமை.. திருவண்ணாமலையில் மதியம் சாப்பிட்டு தூங்கிய அம்சா, கரும்பு காட்டில் எப்படி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்க நகைக்காக அப்பாவி உயிர்களை கொல்வது அதிகரித்து விட்டது.. சமீபத்தில்கூட சிவகங்கை காரைக்குடியில் ஒரு பெண்ணை, காரின் கதவிலேயே முட்டி மோதி கொன்றுவிட்டு, அந்த பெண்ணின் 20 சவரன் நகையை பறித்து கொண்டு சென்றுவிட்டார் அவரது கார் டிரைவர். இப்போது மற்றொரு கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஏந்தல் பைபாஸ் சாலை அருகே உள்ளது சம்மந்தனூர்.. இங்கு சாலையோரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், நேற்று குப்பென்று நாற்றம் வீசியது..

Tiruvannamalai 4 Sovereign Gold Jewellery Crime 4

அந்த வழியாக சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் பீதியும், குழப்பமும் அடைந்து உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்..
போலீசாரும் கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஆய்வு நடத்தினார்கள்..

சாக்குமூட்டையில் அம்சா

அப்போதுதான், தோட்டத்துக்குள்ளிருந்த ஓடையில், சாக்கு மூட்டை கிடப்பதை கண்டனர்.. உடனே அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. இறந்து கிடந்த பெண்ணுக்கு 25 வயதிருக்கும் என்று தெரிகிறது..

பிறகு அச்சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையையும் ஆரம்பித்தனர்.

யாரோ மர்ம நபர்கள் பெண்ணை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சந்தேகித்தனர்..

எனவே, கொல்லப்பட்ட பெண் யார்? என்ற விவரத்தையும் சேகரிக்க ஆரம்பித்தனர்.. இதனிடையே, தன்னுடைய மனைவியை காணவில்லை என்று கடந்த 15ம் தேதி கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் தந்திருந்தார்..

ஸ்கூட்டியில் அம்சா

உடனே போலீசார், விசாரித்தபோதுதான் கொலை செய்யப்பட்டவர் சக்திவேலின் 26 வயது அம்சா என்பது தெரியவந்தது. எனவே, கரும்பு தோட்டம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அப்போது ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு, இளம்பெண் கரும்பு தோட்டம் பகுதிக்கு சென்றது அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார், அந்த ஸ்கூட்டியின் நம்பரை வைத்து அது யாருடையது என்று விசாரித்ததில், கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற 30 வயதின் ஸ்கூட்டி என்பது உறுதியானது.. உடனே நேத்ராவை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது மொத்த உண்மையையும் நேத்ரா போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லிவிட்டார். அதாவது அம்சா அணிந்திருந்த 4 சவரன் நகைக்காக இந்த கொலையை செய்துவிட்டாராம்.

4 சவரன் தங்க நகை

அதாவது அம்சா கடந்த மாதம் 15ம் தேதி தன்னுடைய ஒன்றரை வயது மகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார்.. திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே இறங்கி மருத்துவமனைக்கு செல்வதற்காக அவலூர் பேட்டை சாலையில் ரயில்வே கேட் அருகே வந்தபோதுதான், நேத்ராவும், நேத்ராவின் கள்ளக்காதலன் திருப்பதியும் அங்கு வந்துள்ளார்கள்..

அம்சா கழுத்தில் 4 சவரன் தங்கத்தை பார்த்ததுமே, அம்சாவையும், அவரது குழந்தையையும் திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியில் உள்ள திருப்பதியின் வீட்டிற்கு ஆட்டோவில் கடத்தி சென்றுவிட்டார்களாம்..

அங்கு அம்சா அணிந்திருந்த 4 சவரன் நகையை தரும்படி கள்ளக்காதல் ஜோடி மிரட்டியிருக்கிறது.. ஆனால், அம்சா நகையை தர மறுத்துவிட்டாராம்.

Tiruvannamalai 4 Sovereign Gold Jewellery Crime 4

கரும்பு தோட்டத்தில் அம்சா

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, அம்சாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. பிறகு அம்சாவின் சடலத்தை ஒரு சாக்குப் பையில் மூட்டையாக கட்டியிருக்கிறது.. பின்னர், அம்சாவின் ஒன்றரை வயது குழந்தையை திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை அருகே சாலையில் தனியாக விட்டு விட்டு, சாக்கு மூட்டையை பள்ளிகொண்டாபட்டு சாலையிலுள்ள கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டார்களாம்.

இந்த பகீர் வாக்குமூலத்தை நேத்ரா போலீசில் சொன்னதையடுத்து, கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளது.. நகைக்காக தமிழகத்தில் நடக்கும் கொடூர கொலைகள், பொதுமக்களுக்கு பீதியையும், அதிர்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது.

தோழி வீட்டில் மதியம் சாப்பிட்டு தூங்கிய அம்சா

அதாவது, நேத்ராவும், அம்சாவும் தோழிகளாம்.. நேத்ராவுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் கணவரை பிரிந்து வேங்கிக்கால் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அப்போதுதான் திருப்பதியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றுவிட்ட அம்சாவை பஸ் ஸ்டாண்டில் நேத்ரா சந்தித்துள்ளார்.. தன்னுடைய வீட்டுக்கும் வருமாறு சொல்லி உள்ளார்.. தோழிக்கு மதிய சாப்பாடு தந்து, சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லி உள்ளார் நேத்ரா.

அம்சாவும் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கியபோது, தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்துவிட்டாராம் நேத்ரா.. அப்போது நேத்ராவும், திருப்பதியும், சேர்ந்து அம்சா அணிந்திருந்த 8 பவுன் நகைகளை கழற்ற முயன்றுள்ளனர்.. பிறகு கொலை செய்து நகையை பறிக்க திட்டமிட்டதால், அம்சாவின் குழந்தையை தூக்கி வந்து, கழிகுளம் செல்லும் வழியில் உள்ள கல்லூரி அருகில் உட்கார வைத்துவிட்டு மறுபடியும் வீட்டிற்கு சென்று அம்சாவை கொன்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+