இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது.. அதிகாரிகளே காரணம்.. வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான டிரைவர் மணிகண்டன் செல்போனில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த 37 வயதாகும் மணிகண்டன் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் மகன் இருக்கிறார்.

மணிகண்டனுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளாராம். இந்த பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை சென்று மனு அளித்துள்ளார். ஆனால் இடத்தை அளப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் வீடியோ ஒன்றை பதிவிட்டுவிட்டு வியாழக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவில் மணிகண்டன் கூறுகையில், நான் வைத்த கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தாசில்தார், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இறந்த பிறகாவது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது போல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மணிகண்டன் இறந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணிகண்டனின் மனைவி சுகன்யா அளித்த புகாரில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தனது கணவரின் சாவுக்கு காரணமாக இருந்ததாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications