முகமுடி அணிந்து பின்னாடியே வந்த 10 பேர்.. நசீன்கானை ஓட ஓட விரட்டி.. வந்தவாசியில் நடந்த பயங்கரம்!
திருவண்ணாமலை: ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்த நசீன்கானை முன்விரோதம் காரணமாக முகமுடி அணிந்து வந்த 10 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மஸ்தான் என்பவருடன் இவருக்கு மோதல் இருந்து வந்திருக்கிறது.
இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 3 மாதத்திற்கு முன் நசீர் கான், மஸ்தானைகொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளார். இதன்படியே கொலை முயற்சியில் நசீன் கான் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மஸ்தான் தப்பிவிட்டார். இதுதொடர்பான வழக்கு அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ளது.

விரட்டியது
இந்தநிலையில், நேற்றிரவு நசீர் கான் ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்தபடி, முகமூடி அணிந்து வந்த 10க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கியது.

தப்பி ஓடினார்
பயந்து போன நசீன் கான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் விடாத 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் நிலைத்தடுமாறி நசீர் கான் கீழே சரிந்ததும், அந்த கும்பல் நசீரின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

போலீசார் விசாரணை
ரத்த வெள்ளத்தில் நசீர் இறந்து கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மஸ்தானுக்கு தொடர்பா
போலீசார் நசீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நசீர்கானை கொலை செய்தது யார் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மஸ்தான் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications