திருவண்ணாமலையில் நெற்றியில் விபூதி பட்டையுடன் கிரிவலம் வந்த பிரபல நடிகர்! மாஸ்க் அணிந்தவர் யார்?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வழிபட்ட பிரபல நடிகர் ஒருவர் கிரிவலம் வரும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அவர் நெற்றியில் பட்டை அணிந்து கொண்டு மாஸ்க் போட்டிருந்தார்.
திருவண்ணாமலை கிரிவலத்தின் சுற்றளவு 14 கி.மீ ஆகும். இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகிறது. மலையை வலம் வரும் போது மக்கள் இடது பக்கமாக நடக்க வேண்டும் என்பார்கள்.

ஏனென்றால் மலையையொட்டியுள்ள வலது பக்கம் சித்தர்களும் யோகிகளும் தேவர்களும் வலம் வருவார்களாம். திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அது போல் கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த நாளாகும். திருவண்ணாமலையை சுற்றி இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

கிரிவலம் செல்லும் வழியில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர சூரிய லிங்கங்கள், 16 விநாயகர் கோவில்கள், 7 முருகன் கோயில்கள், ஆதிகாமாட்சி அம்மன் என மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்வீக கிரிவலப் பாதையாக விளங்குகிறது.
கிரிவலம் செல்லும் போது அண்ணாமலையாரை நினைத்து பிரார்த்தனை செய்தவாறே செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஊர் கதை , உறவுக் கதைஎல்லாம் பேசி அரட்டை அடித்துக் கொண்டு செல்லக் கூடாது.

அக்னி தலமான இந்த கோயிலுக்கு ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் நடிகர் பாபி சின்ஹா வந்திருந்தார். அவர் அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை வழிபட்டார். கோயிலில் ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.
அவர் மாஸ்க் அணிந்தபடி சாம்பல் நிற வேட்டி, ஆஃப் ஒயிட் நிற சர்ட் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் வைத்திருந்தார். பிறகு அங்கிருந்து அவர் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றார். இந்த நிலையில் அவர் கிரிவலம் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருதிறது.

-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications