விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க.. நிருபர்களிடம் சீறிய எஸ்.ஏ.சந்திரசேகர்.. அப்படி என்ன கேட்டார்கள்?
விஜய் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை: நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து அவரிடம் கேளுங்கள், என்னிடம் கேட்காதீர்கள் என விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் காட்டமாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பழமைவாய்ந்த ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் உள்ளது. புத்திரகாமேஷ்டி யாகம் என்பது குழந்தை பேறு வேண்டி செய்யப்படும் யாகம் ஆகும். இது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் யாகங்களில் ஒன்று.
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் இருந்தார். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.

தசரத சக்கரவர்த்தி
தசரத சக்கரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். அப்போது வசிஷ்டரும் ஒரு இடத்தை கூற அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அதன் பலனாக தசரதருக்கு 4 புத்திரர்கள் பிறந்தனர். இதையடுத்து தசரதர் இங்கு ஆலயத்தை எழுப்பி சிவபெருமானை வழிபட்டு அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வரர் என பெயர் சூட்டினார் என்பது ஐதீகம்.

நடிகர் விஜய்
இந்த கோயிலுக்கு இன்றைய தினம் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வருகை தந்தார். இந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். இதையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எதிர்காலம்
அதற்கு அவர் கூறுகையில் நடிகர் விஜய் எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அதை விஜய்யிடமே கேளுங்கள் என பதில் அளித்தார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே சில காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. அரசியலுக்கு விஜய் வருவதில் எஸ்ஏசி அவசரப்படுத்துவதை விஜய் விரும்பவில்லை என தெரிகிறது.

தேர்தலில் அவசரம்
ஆனால் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலேயே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எஸ்ஏசி அவசரப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லை என்றே சொல்லப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் 81 ஆவது பிறந்தநாள் விழாவின் போது கூட அவர் தன் மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.விஜய்யோ அவருடைய மனைவியோ உடன் இல்லை. ஊருக்கு உபதேசம் செய்யும் விஜய் தனது வாழ்ககையில் தாய், தந்தையருக்கு உரிய இடத்தை தரவில்லையே என பேச்சுகள் எழுகின்றன.

ஆன்மீக சுற்றுலா
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது ஆன்மீக தலங்களுக்கு சென்று சுவாமியை வழிபட்டு வருகிறார். அண்மையில் ராமேஸ்வரம் சென்ற அவர் அக்னி தீர்த்தத்தில் குளித்து திதி கொடுத்தார். மேலும் சுவாமியிடம் மன உருக பிரார்த்தனை செய்தார். மேலும் விஜய் குடும்பமும் பொது மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். அது போல் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரும் அண்மையில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வழிபட்டார். வாரிசு இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த தாய், தந்தையரை யாரோ மூன்றாவது மனிதர்களை போல் விஜய் உபசரித்த விதமும் விஜய்யின் பாசத்திற்காக ஷோபாவின் ஏக்கமும் தாயின் முகத்தில் நன்றாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications