திருவண்ணாமலையில் ஆச்சரியம்.. நறநறன்னு கடித்தபடியே அரசு பள்ளியில் தோன்றிய "அம்மன்".. வந்தவாசி பரவசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக, கோயில்களில் அல்லது பூஜை நிகழ்வுகளில் சாமியாடுபவர்கள் உடுக்கை அல்லது மத்தளம் போன்ற கருவிகள் வாசிக்கப்படும்போது ஆடுவார்கள்.. சிலபேர் பக்தி பரவசம் காரணமாக, அருள் வந்து திடீரென சாமியாடுவார்கள்..

கடலாடி: 3 வருடங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள கடலாடி அருகே உள்ள மேலக்கிடாரம் என்ற கிராமம் உள்ளது.. அந்த கிராமத்தில் பழமையான அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. ஆனால், அங்குள்ள 2 தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, 10 வருடங்களாக அந்த கோவில் திறக்கப்படாமலேயே இருந்தது.
பின்னர், கோவிலை திறந்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு தாசில்தார் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது..
தாசில்தார்: எனவே, கடலாடி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள், அந்த கோவிலை திறக்க வந்தனர்.. அப்போது திடீரென தாசில்தார் முத்துக்குமார் அருள் வந்து சாமி ஆடினார்... இதனை பார்த்து அங்கிருந்த பெண்களும் சாமி வந்து ஆடினார்.. வழக்கமாக, திருவிழா அல்லது கோயில் நிகழ்வுகளின்போது, அருள் வந்து சாமி ஆடுவது வழக்கம். ஆனால், தாசில்தார் பூட்டப்பட்டிருந்த கோயிலுக்குள் நுழைந்ததுமே சாமியாடியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதோ திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்துள்ளது.. ஆண்டு விழா என்பதால், மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். விழாவில் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியன.. அப்போது மாணவி ஒருவர் சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.
ஆரத்தி: அதாவது ஆதி பராசக்தி வேடமணிந்து, கையில் திரிசூலத்துடன் ஆவேசத்துடன் அந்த மாணவி நடனமாட, அவரை சுற்றிலும் வேப்பிலைகளுடன் மற்ற மாணவிகளும் நடனமாடினார்கள்.. அப்போது உடுக்கை சத்தத்துடன், பாட்டு சத்தம் அரங்கை கிழித்து கொண்டு சென்றது..
இந்த நடனத்தை பெற்றோர்கள் அனைவருமே மெய்சிலிர்க்க பார்த்து கொண்டிருந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந்திருந்த சில பெற்றோர்கள் அருள் வந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது, ஒரு பெண், ஆரத்தி தட்டில் கற்பூரம் கொளுத்திக் கொண்டு, அந்த தட்டுடன் மேடையேறி நடனமாடினார்.. அருள் வந்து அவர் ஆடியதை பார்த்து, மற்ற பெற்றோர்களும் சாமியாட துவங்கினர்..

கற்பூரம்: இதைப்பார்த்து, ஆதிபராசக்தி வேடமணிந்து ஆடிக்கொண்டிருந்த மாணவியும் அந்த பெண்ணுடன் சேர்ந்து மேடையில் சுற்றி சுற்றி ஆடினார்.. இறுதியில், அந்த பெண், அங்கிருந்த அனைவருக்கும் ஆரத்தி எடுத்து, நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். பெற்றோர்கள் அருள் வந்தாடிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications