Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா.. மகன்.. பேரன்! கருணாநிதி குடும்பத்தையே இழுத்த அண்ணாமலை.. மோடி எதிர்ப்பாளர்கள் தகுதி வாரிசாம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: அப்பா மகன் பேரன் என்று தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக குடும்ப ஆட்சி நடந்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஆரணியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்று பேசிய அவர், “தமிழகத்தில், ஐம்பது ஆண்டுகளாகக் குடும்ப ஆட்சி நடக்கிறது. அப்பா மகன் பேரன் என்று இருக்கும் இவர்களால் மக்களின் கஷ்டம் எப்படிப் புரியும்? மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்? கோபாலபுரத்தில் ஆரம்பித்த குடும்ப அரசியல், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்று கரையானைப் போலப் பரவியிருக்கிறது. ஆரணி மக்களின் நெடு நாள் கோரிக்கையான பட்டு பூங்காவுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. கருணாநிதி அவர்களில் பெயரில் ஒரு பட்டு பூங்கா ஆரணியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி.

Annamalai said that family rule in Tamil Nadu for 50 years as father, son and grandson


ஒரு வருடம் ஆகிறது. இதுவரை ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. நெசவாளர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி, நெசவாளர்களுக்கு அடையாள அட்டை, நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைப்பது, நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைப்பது, நெசவாளர் சேமிப்பு உதவித்தொகை 1000 ரூபாய் என்பது 2000 ரூபாயாக உயர்த்துதல் என வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, பட்டுப் பூங்காவுக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைத்துக் கொள்ளட்டும்.

திமுக மொழியை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழில் 55,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் மட்டும் மூன்று மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்கு வரும்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை வழங்குவோம். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் நம் குழந்தைகள் எப்படி முன்னேறி இருக்க வேண்டும் என்று இப்போதிருந்தே தயார் செய்கிறோம்.

தமிழகத்தில் பாஜக வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, அரசு வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி, குடிக்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும். கள்ளுக் கடைகள் திறக்கப்படும். திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு மரியாதை இல்லை. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், காவல் துறையினரைத் தாக்குவதும் தரக்குறைவாகப் பேசுவதும் நடத்துவதுமாக இருக்கிறார்கள்.

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறை என்பது மிகக் கடினமான பணி. தங்கள் சுக துக்கங்களை மறந்து, சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நேரமும் பணியிலே கவனமாக இருக்க வேண்டும். அத்தனை கடினமான பணியில் இருக்கும் காவல்துறையினரை, சமூக விரோதிகள் அவமானப்படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது, தெலுங்கானா மாநிலத்தைப் போல, தமிழகத்திலும் காவல்துறையினரின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு இரட்டிப்பாக்கப்படும்.

காவல்துறையினருக்கு பணி நேரம் கட்டாயமாக எட்டு மணி நேரமாகக் குறைக்கப்படும். அதற்கேற்ப காவல்துறையில் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். காவல்துறையில் 33% மகளிருக்கு ஒதுக்கப்படும். வரவேற்பாளர் உள்ளிட்ட இதர பணிகளை, ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் கொடுத்துவிட்டு, முழு நேரமும், சட்டம் ஒழுங்கில் மட்டுமே காவல்துறையினர் கவனம் செலுத்தும்படி மாற்றம் கொண்டு வரப்படும். காவல்துறையினர், நேர்மையாக, தைரியமாக, தவறு செய்தவர்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்களின் கோரிக்கையாக இருக்கும்.

நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக இருக்கும் தலைவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி, வாரிசு என்ற ஒரே தகுதிதான். ஊழல், குடும்ப அரசியல் மலிந்து போன அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்போம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமரின் நேர்மையான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+