திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி! களமிறங்க காய் நகர்த்தும் அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு மகன் எ.வ.வே.கம்பன், அதற்கான கிரவுண்ட் ஒர்க்கை சத்தமின்றி மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் மிகுந்த நெருக்கம் இருப்பதால், எ.வ.வே.கம்பனுக்கு கட்சித் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

தற்போது திமுக மருத்துவ அணியில் மாநில பொறுப்பில் உள்ள கம்பன், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். கட்சியினர் இல்ல நல்லது கெட்டதுகளில் தனது தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்கிறார். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்தி வருகிறார்.
இதனிடையே இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கலசபாக்கம் தொகுதியை எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது. அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, ஜீவா ரெசினசியல் பள்ளி என கல்வி நிறுவனங்களை அமைச்சர் எவ்.வ.வேலுவின் மற்றொரு மகன் கவனித்து வரும் நிலையில் மூத்த மகன் கம்பன் முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டார்.

தற்போது திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ள அண்ணாதுரை, கம்பனுக்காக தொகுதியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் திமுக தலைமையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
எ.வ.வே.கம்பனை திமுக வேட்பாளராக களமிறக்கினால் மகனை எப்பாடுபட்டாவது அமைச்சர் வேலு ஜெயிக்க வைத்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications