எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இரவு முழுவதும் ஐடி ரெய்டு! யார் இந்த கமல்சந்த்?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நபர்களின் வீடுகளில் இரவு முழுவதும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர் என சொல்லப்படும் தொழிலதிபர் கமல்சந்த் ஜெயின் என்பவரது வீடு, கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின. குறிப்பாக பின்வரும் நகரங்களில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டன.திருவண்ணாமலை மாநகராட்சியில் ஐயங்குளத் தெருவில் உள்ள பிரபல தொழிலதிபர் கமல்சந்த்ஜெயின் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் திருமஞ்சன கோபுரம் தெருவில் உள்ள தாகா டெவலப்பர்ஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் என 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை சட்டசபை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழக பொது பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணத்தை தாகா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் தாகா டெவலப்பர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 30 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திருவண்ணாமலை மாநகரின் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் ஆதிமூலம் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில் 2 கோடியே 67 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை அடுத்து கடந்த 4 நாட்களாக திருவூடல் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை நிறுவனமான சாந்தி சொர்ண மஹால் நகை கடையில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து நான்கு நாட்கள் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அதுவும் திருவண்ணாமலை சட்டமன்ற வேட்பாளர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் பிரபல தொழில் அதிபர் தாகா டெவலப்பர்ஸ் உரிமையாளர் கமல்சந்த்ஜெயின் சொந்தமான இடங்களில் 30 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமான வரித்துறையினரால் நடைபெறும் தாகா டெவலப்பர்ஸ் நிறுவனம் திருவண்ணாமலை மாநகரில் உள்ள 9 சாலைகளிலும் நிலம் வீட்டுமனை விற்பனை செய்து வரும் மிகப்பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: முக்கிய அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள்.
கோவை, திருப்பூர்: காந்திபுரம் மற்றும் திருப்பூரில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகள்.
திருச்சி, கரூர்: திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களின் கிளைகள்.
சேலம்: ஓமலூர் சாலை மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள கடைகள்.
தஞ்சாவூர் & கும்பக்கோணம்: காந்திஜி சாலை மற்றும் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள்.
சோதனையின் பின்னணி
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வேட்டிகள், சேலைகள் போன்றவற்றைத் தயார் செய்வதாகவோ அல்லது தேர்தல் நிதியைக் கையாள ஜவுளி நிறுவனங்களைப் பயன்படுத்துவதாகவோ வந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
சேலம்: வேட்டிகள் மற்றும் சேலைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தயார் செய்யப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் பேரில் ஒரு கடையில் 6 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடைபெற்றது.
அரசியல் தொடர்பு: சேலம் ஆத்தூர் பகுதியில் திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தற்போதைய நிலை
சோதனையின் போது கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல இடங்களில் மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கணக்கில் வராத பணம், ஆவணங்கள் மற்றும் கணினித் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சோதனைகள் முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளும், வருமான வரித்துறையும் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications