கணவர் இறந்த துக்கம்.. டாக்டருக்கு படிக்கும் மகளுடன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த மனைவி துக்கம் தாங்காமல் டாக்டருக்கு படிக்கும் தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்த்தை ஏற்படுத்தி உள்ளது.
'
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் கணவர் பால முருகன். இவர் அழகு கலை நிபுணர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார்.

Recommended Video

    கள்ளக்குறிச்சி: ஒரே சேலை... தூக்கில் தொங்கிய தாய், மகள்.. போலீசார் தீவிர விசாரணை..!

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பாலமுருகன் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதனால், லலிதாவும் மகள் தர்ஷினியும் கடும் வேதனையில் இருந்தனர்.

    டாக்டருக்கு படிக்கும் மகள்

    டாக்டருக்கு படிக்கும் மகள்

    இதனிடையே தர்ஷினி புதுவை அருகேயுள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வந்தார். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் லதாவும் தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தர்ஷினியும் இருந்துள்ளனர்.

    விபரீத முடிவு

    விபரீத முடிவு

    இதற்கிடையே , லலிதாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், அவரை அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அதன்பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் லலிதாவும், தர்ஷினியும் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்து மயங்கினர்

    வீட்டில் மயங்கினர்

    வீட்டில் மயங்கினர்

    தாயும் மகளும் நீண்ட நேரம் தந்தையை பார்க்க வராத நிலையில் அக்கம் பக்கத்தினர் லலிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, உள்ளே இருவரும் மயங்கிகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தற்கொலை

    தற்கொலை

    உடனடியாக, அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் இருக்கிறதா என்பதை அறிய முயன்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் மகளும் ஏற்கனவே இறந்து போனதாக கூறி விட்டனர். கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த சோகத்தில் மனைவி , தன் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+