மீனா ஜெயக்குமார் குடும்பத்தை எப்படி தொடர்புபடுத்தி பேசலாம்? கேரக்டர் அசாசினேசன் சதி-எ.வ.வேலு டென்ஷன்
திருவண்ணாமலை: கோவை திமுக நிர்வாகியும் அமலாக்கத்துறை சோதனைகளில் சிக்கியவருமான மீனா ஜெயக்குமார் குடும்பத்தையும் என் குடும்பத்தையும் தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையில் நியாயம்? என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் 5 நாட்களாக இடைவிடாத சோதனைகள் நடத்தினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனைகளின் போது பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மைச்சர் எ.வ.வேலு, தாம் தொடர்புடைய இடங்களில் ஒரு பைசாவை கூட யாரும் கைப்பற்றவில்லை என்றார். அப்போது கோவை திமுகவை சேர்ந்த மீனா ஜெயக்குமார் குடும்பத்திலும் சோதனை நடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு எ.வ.வேலு அளித்த பதில்: நீங்கள் சொல்கிற மீனா ஜெயக்குமார் பெயர் நினைவுக்கு வருகிறது. ஜெயக்குமார்தான். திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் பிறந்தவர்தான் ஜெயக்குமார். அவருடைய தம்பி முருகன் இன்றும் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார். அவர் இந்த ஊர்க்காரர்.
திருவண்ணாமலை டூ கோவை: ஜெயக்குமார் சின்ன வயசில் கோவைக்கு போய் பல பிசினஸ் செய்தார். ஆஸ்பத்திரியில் கூட பால் பூத் வைத்தவர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர். அங்கேயே திருமணமும் செய்து கொண்டார். அந்த பெண்ணும் திருவண்ணாமலையை சேர்ந்தவரும் இல்லை. ஜெயக்குமார் இங்கே இருந்து போய் செட்டிலாகிட்டார். 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் ஓனர்.
பொங்கலூர் பழனிசாமி: நான் கோவைக்கு போனால் திருவண்ணாமலைக்காரர் என்பதால் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்வார். இன்னும் சொல்லப் போனால் இவர் உங்க ஊர் காரர் என எனக்கு அறிமுகப்படுத்தியதே முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிதான். அப்புறம்தான் எனக்கு பழக்கம். நான் கோவை போனால் உள்ளூர்காரர் வருகிறாரே என அவர் வரவேற்கமாட்டாரா? அது என்ன கொலைக்குற்றமா? அதற்காக அவரது பிசினஸில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்பது எந்தவிதத்தில் நியாயம்?
எ.வ.வேலு வீட்டில் நீடிக்கும் வருமான வரி சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கும் பணம்.. கணக்கு சொல்வாரா?
எங்க குடும்பத்தை தொடர்புபடுத்துவதா?: அவருடைய மனைவி அந்த மாவட்டத்தில் திமுக நிர்வாகியாக இருக்கிறாங்க.. அங்கிருக்கிற கழக முன்னோடிகள் பரிந்துரையில் கட்சியில் பதவி வாங்கி இருக்கலாம். அதற்காக என்னையும் அவங்க.. அவங்க குடும்பத்தையும் தொடர்புபடுத்தி பேசுவது எந்த விதத்தில் நியாயம்? யாராவது ப்ரூப் பண்ண முடியுமா? கற்பனைக்கு என்ன என்ன எட்டுமோ அப்படிப்பட்ட செய்திகளை 4 தினங்களாக விதைத்து கொண்டிருக்கிறீர்கள்.
கேரக்டரை அசிங்கப்படுத்த முயற்சி: தனிப்பட்ட முறையில் என்னுடைய கேரக்டரை அசிங்கப்படுத்தலாம்னு பல பேர் முயற்சிக்கிறாங்க.. எந்த காலத்திலும் முடியாது. நான் நேர்மையானவன்; மனசாட்சிக்கு பயந்தவன்; என் தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் இருப்பேன். இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications