மனைவியின் பச்சை துரோகம்.. முதுகில் குத்திய நண்பன்.. கழுத்தை அறுத்து பைக்கில் கொண்டு போன "வெறி" கணவன்
மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை கொன்றுவிட்டார் இளைஞர் ஒருவர்
திருவண்ணாமலை: தன் மனைவியிடம் உறவு வைத்திருந்ததால், உயிர் தோழனை கொன்று, அந்த சடலத்தை பைக்கில் ரொம்ப தூரத்துக்கு வைத்து கொண்டு ஓட்டி சென்றார் நித்யா.. பிறகு ஒரு கிணற்றில் கல்லை கட்டி அந்த சடலதை உள்ளே போட்டுவிட்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை தந்து வருகிறது.
திருவண்ணாமலை அருகே உள்ளது எழில் என்ற கிராமம்... இங்கு வசித்து வந்தவர் பிரதாப்.. 20 வயதாகிறது.. இவரது நண்பர்கள் நித்யானந்தம், பிலிப்.

சந்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நித்யானந்தம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் வத்ராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பிலிப் 23.. இவர்கள் எல்லாரும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் ஒரு தனியார் பேக்டரியில் வேலை பார்த்து வந்தனர்.. அதற்காக ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர்.
ஜுன் 16ம் தேதி வேலைக்கு போன பிரதாப், அதற்கு பிறகு வீட்டுக்கு வரவில்லை.. ஊரில் இருந்து குடும்பத்தினர் போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை.. அதனால் நேரடியாக கிளம்பி வந்து மகனை தேடினர்.. எங்கேயும் கிடைக்கவில்லை.. இதற்கு பிறகு ஒரகடம் போலீசிலும் புகார் தந்தனர்.
அதன்படியே விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் பிரதாப்பை கொன்றது நண்பர்கள் நித்யானந்தம், பூவரசன், பிலிப் ஆகியோர் என்பது தெரியவந்தது.. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணையும் ஆரம்பித்தனர்... அப்போது பல பூதாகரமான விஷயங்கள் வெடித்து கிளம்பின.
நித்யானந்தமும், அவரது நண்பர் பூவரசனும் பார்ட் டைம் திருடர்களாம்.. பைக் திருட்டு, நகை திருட்டு என ஈடுபடுபவர்கள்.. அப்படித்தான் பைக் திருட்டில் நித்யானந்தம் ஒருமுறை ஜெயிலுக்கு போய்விட்டார்.. அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர, அவரது மனைவி சத்யா, நண்பன் பிரதாப்பை நேரில் சந்தித்து உதவி கேட்டார். அப்போதுதான் சத்யாவுக்கும் பிரதாப்புக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுவிட்டது.
கடைசியில் 2 பேரும் சேர்ந்து ஜெயிலில் இருந்த நித்யாவை மறந்துவிட்டார்கள்.. இந்த விஷயம் நித்யாவுக்கு தெரிந்தது.. ஜெயிலில் இருந்து எப்போது வெளியே போனாலும் பிரதாப்பை கொன்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.. அதற்காக தன் நண்பன் பிலிப்பிடம் உதவி கேட்க, அதற்கு அவரும் சம்மதம் சொன்னார்.
சம்பவத்தன்று பிலிப் பிரதாப்பை அழைத்து கொண்டு போய் தண்ணி அடித்தார்.. ஒருகட்டத்தில் பிரதாப் மயங்கி விழுந்தார்.. பிறகு நித்யானந்தம், பூவரசன் ஆகியோர், அங்கு சென்று, பிரதாப்பை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பிறகு சடலத்தை பைக்கில் வைத்து கொண்டு, உமையாள் பரணஞ்சேரி பகுதிக்கு சென்று, அங்கிருந்த ஒரு கிணற்றில் கல்லை கட்டி உள்ளே போட்டுவிட்டனர்.
அந்த கிணற்றுக்குள் முள்செடிகளை போட்டு பாழுங்கிணறு போல செட்டப் செய்துவிட்டு தப்பிவிட்டனர்... அத்துடன் நிற்கவில்லை.. அந்த கிணற்றில் இருந்து சடலம் மேலே மிதந்துவிடுமோ என்று அடிக்கடி போய் கிணற்றை எட்டி எட்டி பார்த்துள்ளனர். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications