மகனை கொன்ற கள்ளக்காதலனை பழி வாங்கிய நெசப்பாக்கம் மஞ்சுளா.. இதைப் படிங்க அபிராமி!
Recommended Video

திருவண்ணாமலை: கள்ளக்காதலை போட்டு கொடுத்ததால் ஆத்திரமடைந்து சிறுவனை கொன்ற விவகாரத்தில் பழித்தீர்க்கும் நடவடிக்கையாக சிறுவனின் தாய் கள்ளக்காதலனை கொன்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் கிப்ட் ஷாப் கடை வைத்திருந்தவர் நாகராஜ். இவரது கடைக்கு டிசம்பர் 29-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வந்த இருவர் கடைக்குள் புகுந்து அடித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி வெளியே வந்தபோது அங்கிருந்த இருவர் மடக்கி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
திருவண்ணாமலையில் நடந்த நாகராஜ் கொலை குறித்து கொலையாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில் மஞ்சுளா உள்பட 5 பேர் சரணடைந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் ஜனவரி 4-ஆம் தேதி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இந்த கொலையில் இன்னும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காதல் திருமணம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. மஞ்சுளா ஏற்கெனவே திருமணமானவர். திருமணமான இரு வருடங்களில் கணவர் இறந்துவிட்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த மஞ்சுளாவை கார்த்திகேயன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவருடன் கள்ளக்காதல்
மஞ்சுளா, மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி முடிந்ததும் சிறுவனை தாய் அல்லது தந்தை அழைத்து வருவது வழக்கம். அப்படி இருக்கையில் தாய் மஞ்சுளாவிற்கு அப்பகுதியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜ் (திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பணிபுரியும் போது ஏற்பட்ட கள்ளக்காதல் அப்படியே தொடர்ந்தது) என்பவருடன் கள்ளக்காதலாக ஏற்பட்டுள்ளது. இதனால் நாகராஜும் ரித்திஷை அவ்வப்போது அழைத்துவந்துள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுவனை நாகராஜ் கடத்தி சென்றுள்ளார். பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இரும்புக்கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் நாகராஜ், சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். சிறுவன் ரித்திஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நாகராஜ் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது மஞ்சுளாவிற்கும் தனக்கும் உள்ள தொடர்பை ரித்திஷ், தந்தை கார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

பழிவாங்க கொலை
அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், நாகராஜை எச்சரித்ததோடு அவர் மீது சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். 15 நாட்கள் சிறையில் இருந்த நாகராஜை அவரது குடும்பத்தினர் வெளியே துரத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், சிறுவனை பழிவாங்க கொலை செய்ததாக தெரிவித்தார் என போலீஸார் கூறினர்.

மகன் பறிபோன சோகம்
இதனிடையே தனது குழந்தையை கொன்று வாழ்க்கை பாழாகி போக காரணமாக இருந்த நாகராஜை பழித் தீர்க்க வேண்டும் என நினைத்து ரூ 2 லட்சம் கொடுத்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் துப்பாக்கி வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பொம்மை துப்பாக்கி வாங்கி வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நாகராஜை கொலை செய்த மஞ்சுளா
கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்த மஞ்சுளா, கூலிப்படையை ஏவி நாகராஜை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக அரும்பாக்கம் ஷியாம், சந்தோஷ், சரவணன், சென்னை சூளைமேடு தினேஷ் உள்பட 5 பேரை ரூ. 5 லட்சத்துக்கு விலை பேசியுள்ளார். இவர்கள் திருவண்ணாமலை சென்று நாகராஜை கொலை செய்துள்ளனர். இதன் மூலம் மகன் கொலைக்கு மஞ்சுளா பழி தீர்த்து கொண்டுள்ளார்.

அபிராமி
என்னதான் கள்ளக்காதலனா இருந்தாலும் தன் மகனை கொன்றுவிட்டான் என்பதற்காக வெறியுடன் மகன் இறந்து ஓராண்டுக்கு முன்னரே கள்ளக்காதலனை கொலை செய்து விட்டார் மஞ்சுளா. என்னதான் கொலை என்பது பாவச் செயலாக இருந்தாலும் ஏதும் அறியாத பச்சை மண்ணை கொலை செய்தவனை கொல்ல வேண்டும் என தாய் மஞ்சுளாவின் மனம் கொதித்துள்ளது. ஆனால் இந்த பாசம் வர வேண்டியவங்களுக்கு வரவில்லையே என்ன செய்வது ராமி அபிராமி...
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications