Parvathamalai: கரடுமுரடான கடப்பாரை பாதை! பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலை ஏற புதிய விதிமுறைகளை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக பயணிப்போமாக!
பக்தர்களுக்கான விதிமுறைகள்: காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

18 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி வழங்கப்படும். இதர மாவட்டத்தினர் 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலையில் சிவன் கோயில் உள்ளது. இங்கு பலர் ஆன்மீக பயணமாக சென்று வருகிறார்கள். அண்மைக்காலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதனால் வனத்துறை இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.இரவு நேரம் அல்லது மாலை நேரத்தில் மலையேறுவது ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் பர்வதமலை கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரம் கொண்டது. இங்கு மல்லிகார்ஜுன பிரம்மராம்பிகை அம்மாள் உள்ளிட்ட கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயிலை 3ஆம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இங்கு மலையேற ஒருவருக்கு ரூ 10 வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. அதன்படி பார்த்தால் பர்வதமலைக்கு அடிக்கடி செல்ல முடியாது. பர்வதமலைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பயணிகளின் உடைமைகள் வனத்துறையினரின் முழு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். பர்வதமலைக்கு செல்ல கெங்கலமகாதேவி, செம்மடந்தாங்கல், நம்மந்தங்குட்டை, கடலாடி, பட்டியந்தல், தென் மகாதேவ மங்கலம், திடீர் நகர், மேலாக்கொடி, பாலூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு கட்டணமில்லா அனுமதிக்கப்படுவர்.
பர்வதமலையில் கடப்பாரை படிக்கட்டு என்ற ஒரு கரடுமுரடான வழி இருப்பதால் அங்கு அந்த கடப்பாரைகள் பிடித்துக் கொண்டு ஏறுவது அபாயகரமானதாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
அதிலும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மலையேறி சிவனிற்கு அபிஷேகம் நடத்தலாம். இந்த கோயிலுக்கு வர படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி ஆகிய கடுமையான பாதைகளை கடந்துதான் செல்ல வேண்டும். இதில் ஆபத்துகள் நிறைய இருப்பதால்தான் வனத்துறையினர் விதிமுறைகளை வகுத்துள்ளனர். எனவே பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட விதிகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications