திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடா அடடா.. பெருமாள் எத்தனை சிக்கலை கொடுத்தாலும்.. செல்பி எடுக்க நம்மவர்கள் சளைக்கலையே!

பெருமாள் சிலையை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரமாண்ட விஷ்ணு சிலை… வழி எங்கும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு- வீடியோ

    திருவண்ணாமலை: பிரமாண்ட பெருமாள் சிலையை பார்த்ததும் பக்தி பரவசத்துடன் கும்பிட்ட பக்தர்கள் முண்டியடித்து செல்பிகளையும் எடுத்து கொண்டனர்.

    வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது. அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது.

    ஏராளமான தடைகள்

    ஏராளமான தடைகள்

    இந்த சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன. பிறகு கடைகள், வீடுகளை இடித்து கொண்டு கிளம்பியது. இதனை தொடர்ந்து மண் சாலை, குறுகிய பாலம் என அடுத்தடுத்த தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. சாலையின் குறுக்கே எங்கெல்லாம் சென்டர் மீடியன்கள் இருக்கிறதோ அவையெல்லாம் அகற்றப்பட்டன.

    ரெயில்வே கேட்

    ரெயில்வே கேட்

    இவை எல்லாவற்றையும் தாண்டி பெருமாள் பயணம் தொடர்ந்து வருகிறது. நேற்று வடஆண்டாப்பட்டு கிராமத்தை தாண்டி சிலை நகர தொடங்கியது. ஆனால் வழித்தடத்தில் ரெயில்வே கேட் வந்தது. அந்த நேரத்தில் சரக்கு ரெயில் செல்லும் நேரம் என்பதால் கொஞ்ச நேரத்துக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டது. அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பஸ் ஸ்டாண்டு

    பஸ் ஸ்டாண்டு

    கூட்ட நெரிசலை தாண்டி செல்ல முற்படும்போது, அருகில் இருக்கும் பெரியார் சிலை பெருமாளுக்கு சிக்கல் தந்துவிடுமோ என்று போலீசார் நினைத்தனர். ஆனால், பெரியார் சிலை அருகே பெருமாள் சிலை எந்த சிக்கலும் இன்றி ஈசியாகவே கொண்டு போகப்பட்டது. பிறகு ஒரு வழியாக திருவண்ணாமலை கிரிவலப்பாதை வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு பெருமாள் வந்துவிட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிட்டனர். சிலைக்கு பின்னே பலர் ஊர்வலமாக வர ஆரம்பித்தனர்.

    செல்பிகள்

    செல்பிகள்

    பெருமாள் அருகில் இருந்த உண்டியலில் காணிக்கைகளை போட்டனர். மேலும் பல பக்தர்களோ, மாலைகள், பூக்கள் வாங்கி வந்து பெருமாள் மீது வீசினார்கள். பலர் பெருமாளை தொட்டு கும்பிட முண்டியடித்தனர். மேலும் பெருமாள் சிலையுடன் நின்று செல்பிகளையும் எடுத்து கொண்டார்கள். நிறைய பேரால் பெருமாளை கிட்ட பார்க்கவே முடியவில்லை. அதனால் வீட்டின் மொட்டை மாடிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் நின்று கொண்டு பார்த்தனர்.

    10 கி.மீ., பயணம்

    10 கி.மீ., பயணம்

    பின்னர் போளூர் சாலை வழியாக அண்ணா நுழைவுவாயில் அருகே வந்து கிரிவலப்பாதை திருநேர் அண்ணாமலை கோவிலை கடந்து சென்றது. கிரிவலப்பாதையில் மட்டும் சுமார் 10 கி.மீட்டர் தூரம் பெருமாள் சிலை பயணித்தது. இப்போது அந்தியந்தல், கோலாபாடி, கண்ணக்குருக்கை வழியாக செங்கம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் பெருமாள்.

    English summary
    Kothandaraman Idol around Tiruvannamala Girivalam route. Many devotees worshiped Lord Perumal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X