"நமோ நமோ" என மோடி புராணம் பாடும் பிரேமலதா.. குஷியில் பாஜக "பக்தர்கள்"
திருவண்ணாமலை: பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் பிரசார கூட்டங்களில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருவதன் மூலம் பாஜக தலைவர்கள் மனதை குளிர்வித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 4 தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஈடுபட்டுள்ளார்.
தன் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

முன்னிலை
ஒவ்வொரு பிரசாரத்திலும் முதல்வர் பழனிச்சாமியை விட பிரதமர் மோடியையே முன்னிலைப்படுத்தி வருகிறார். அவர் எல்லா பிரசாரங்களிலும் பொதுவாக பேசும் சில விஷயங்களை பார்ப்போம். அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

நாடுகள் வியப்பு
திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரென்றே தெரியவில்லை. நாட்டை பாதுகாக்கும் வலிமையான பிரதமராகவும் தைரியமான பிரதமராகவும் மோடி உள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது தன் நிர்வாக திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது திறமையை பார்த்து உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.

பாதுகாக்க முடியும்
மோடிக்கும் ராகுலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் மட்டுமே நாட்டு மக்களை பாதுகாக்க முடியும்.

புல்வாமா தாக்குதல்
சில நேரங்களில் புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என உளறி கொட்டினாலும் முதல்வர் எடப்பாடியை விட பிரேமலதா மோடி புராணம் பாடி வருவதை தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications