குஜராத் ட்ரிப்.. விமானத்தில் பறந்த கொள்ளையன்? திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. போலீஸ் பரபர தகவல்
6 பேருக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் இருந்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குற்றவாளிகளை போலீசார் நெருங்கிவிட்டதாக தனிப்படை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது.
வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. முறையாக திட்டமிட்டு இந்த கொள்ளயை அந்த கும்பல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை
திருவண்ணாமலையில் வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில்எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. 3 பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்களில் சோதனை நடைபெற்றது. மேலும் ஒன்இந்தியா ஏடிஎம் ஒன்றிலும் கொள்ளை நடத்தப்பட்டது. ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சென்று, மையத்தின் கதவை மூடிவிட்டு, கேமராவை மறைத்துவிட்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.

எப்படி நடந்தது?
வெல்டிங் மிஷின் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மிகவும் வித்தியாசமாக மேற்கொண்டு உள்ளனர். போலீஸ் இல்லாத சாலையில் உள்ள ஏடிஎம் சென்று அந்த ஏடிஎம் கதவை மூடி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று பின் பக்கம் சர்வர் கதவை உடைத்து சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி உள்ளனர். அதன்பின் கேமராவை உடைத்து நொறுக்கி உள்ளனர். பின்னர் ஏடிஎம் மிஷினை வெல்டிங்மிஷின் உதவியுடன் உடைத்து உள்ளனர். பின்னர் பணத்தை திருடியதும் மிஷினுக்கு தீ வைத்து உள்ளனர்.

கொள்ளை
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது கூடுதல் தகவல்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து இருக்கிறோம். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கர்நாடகா, குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இவர்களை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். குற்றம் செய்தவர்களை நெருங்கிவிட்டோம். ஹரியானாவை சேர்ந்த கும்பல்தான் இதை செய்தது என்பது உறுதியாகி உள்ளது. அதை அறிவியல் பூர்வமாக நாங்கள் நிரூபித்துவிட்டோம்.

யார் செய்தார்கள்
இந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. விரைவில் எல்லோரையும் கைது செய்வோம். அது தொடரான கூடுதல் விவரங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 6 பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 4 பேர் கொள்ளைக்கு உடைந்தையாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குஜராத்திற்கு தப்பி சென்ற 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடப்பதால் அவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை.

அடைக்கலம்
இந்த 6 பேருக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கர்நாடகா மாநிலம் கேஜிஎப் பகுதியில் இருந்துள்ளனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் 2 பேர் விமானம் மூலம் ஹரியானா தப்பி சென்றுள்ளனர். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் ஹரியாணாவிற்கு இவர்கள் எஸ்கேப் ஆகியுள்ளார். இவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை பிடிக்கப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்படாமல் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications