கட்டுப்பாடில்லாத கூட்டம்.. வானவில் பஞ்ச்.. திமுக கூட்டத்தில் தவெகவை சீண்டிய உதயநிதி
திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரை சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட முடியாது என்றார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு எதிர்வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலை திமுக இளைஞரணி கூட்டம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய வடக்கு மண்டல இளைஞரணி கூட்டத்தில் திமுக கட்சி ரீதியாக 29 மாவட்டங்கள், 91 தொகுதிகளில் இருந்து சுமார் 1,30,329 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். மதியம் அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று தடபுடல் விருந்து வைக்கப்பட்டது. மாலை 5.20 மணியளவில் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மேடை ஏறினார். மாலை6 மணியளவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மேடை ஏறினார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மேடையில் இருந்து அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி உதயநிதி கௌரவித்தார். அமைச்சர் எ.வ. வேலு வரவேற்புரை ஆற்றினார். திருவண்ணாமலை திமுக சார்பில் உதயநிதிக்கு வாளும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, "இரண்டு வருடங்களுக்கு முன்பு இளைஞரணி மாநாட்டை சேலத்தில் நடத்தினோம். அது 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் நமக்கு தான் வெற்றி என்பதை உறுதிப்படுத்துகிறது. பல கட்சிகள் உறுப்பினர்களை இணைக்கவே கஷ்டப்படுகிறார்கள். நம் கட்சியில் பூத், பாகம் நிர்வாகிகளை என்று பரவலாக்கியுள்ளோம். திருவண்ணாமலையில் மலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு கடலும் சூழ்ந்துள்ளது என்று நம் இளைஞரணி தம்பிகளின் கூட்டம் உணர்த்துகிறது.
அமித்ஷா மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்
சந்தித்த தேர்தல்களில் எல்லாம் தோல்வியே சந்திக்காதவர் கலைஞர். மற்ற கட்சிகளின் கூட்டங்களில் 1,000 பேரை திரட்டவே சிரமப்படுகிறார்கள். ஒரே மண்டல இளைஞரணி கூட்டத்தில் 1.30 லட்சம் பேரை திரட்டியுள்ளோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்ய முடியாத சாதனையை நாம் செய்துள்ளோம். இது கணக்கு காட்ட நடத்தவில்லை. எதிரிகளின் தப்பு கணக்கை சுக்கு நூறாக்க கூட்டப்பட்டுள்ளது.
இது கொள்கை கூட்டம். கட்டுப்படான கூட்டம். கட்டுப்படாத கூட்டத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது.நாம் எப்போதும் ஆதிக்கத்திற்கு அடி பணிந்தது இல்லை. இப்போது அமித்ஷா உள்ளிட்டோர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். பீகார் முடிந்த கையோடு தமிழ்நாடு தான் இலக்கு என்று அமித்ஷா கூறுகிறார். அவரின் மிரட்டலுக்கு எப்போதும் அஞ்ச மாட்டோம். போர் களத்தில் கருப்பு, சிவப்பு படை துணிந்து நிற்கும்.
சங்கி கூட்டம் நெருங்க முடியாது
அண்ணா கட்சியை தொடங்கியபோது டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள தயார் என்று கூறினார். அன்று முதல் களத்தில் போர் செய்து கொண்டிருக்கிறோம். போரின் நம் எதிரிகள் தான் மாறியுள்ளனர். தலைவர் சொன்னதை போல டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். குஜராத்தின் கனவு நிச்சயம் நிறைவேறாது. கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரை சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட முடியாது.
குஜராத், பீகாரை போல தமிழகத்தை நெருங்க முடியாது. பாஜக மதம் பிடித்து ஓடும் யானையை அடக்கும் அங்குசம் நம் தலைவர். இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால் தான் பழைய அடிமைகளுடன், புதிய அடிமையை கூட்டி கொண்டு வருகிறார்கள். கூடவே வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் எல்லாவற்றும் கூட்டி வருகின்றனர்.
அதிமுக இன்ஜின் இல்லாத கார்
அவர்களை நம்பித்தான் எடப்பாடி பழனிசாமியும் வெளியில் வந்துள்ளார். நாங்கள் மக்களை நம்பி வந்துள்ளோம்.அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பேட்டரி டவுனாக உள்ள காரை தள்ளிவிடலாம். அதிமுக இன்ஜினே இல்லாத கார். சுதந்திரமாக, சுய மரியாதையோடு வாழ்வதுதான் முக்கியம்.
அதனால் தான் இளைஞர்களும், தமிழக மக்களும் திமுகவை நோக்கி வருகிறார்கள். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் செய்ய நினைக்கிறார்கள். நாங்கள் உங்களை நிச்சயம் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். அதற்கான விளைவுகளை களத்தில் சந்திப்போம். எவ்வளவு சீண்டினாலும் சந்திக்க தயார். பலர் இடையில் வருவார்கள் செல்வார்கள்.
வானவில் தற்காலிகம்.. உதய சூரியன் நிரந்தரம்
வானவில் கலர் கலராக இருக்கும். அதை பார்க்க மக்கள் கூட்டமாக வருவார்கள். சென்றுவிடுவார்கள். உதய சூரியன் மட்டுமே நிச்சயம். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து நம் திட்டங்களை கூறுங்கள். நாம் பெற போகும் வெற்றி சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. திமுக 7வது முறையாக ஆட்சியமைப்பது உறுதி. நம் தலைவர் தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சர் ஆவது உறுதி.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு அனைத்து நாடுகளும் அடிபணிந்தன. ரஷ்யாவில் ஸ்டாலின் கர்டு என்று நகரம் மட்டுமே எதிர்த்து நின்றது. அப்படி இந்தியாவில் பாசிசத்தை எதிர்க்கும் ஸ்டாலின் கர்டு நம் தலைவர். அவருக்கு நம் இளைஞரணி எப்போதும் உற்ற துணையாக இருக்கும்." என்றார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications