Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலைக்கு "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாமே.. பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.. என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Thiruvannamalai Major incident and whats happening in the Bangalore Chengam Highway road

கடந்த அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கிவிட்டது.. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

விபத்து: அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் மீண்டும் விபத்தில் பலர் இறந்துவிட்டனர். கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

விபத்து நடந்த இடத்தில், சில வருடங்களுக்கு முன்பு, விவசாய பண்ணை இருந்திருக்கிறது. இப்போது, அந்த பண்ணை செயல்படாமலும் உள்ளது.. எனவே, அந்த பகுதியே, அடர்ந்த காடு போல காணப்படுகிறது. சாலையில் அடர்ந்த தைலம் மரங்கள், கருவேல மரங்கள், நிறைய உள்ளதால், சாயங்காலம் வெகுசீக்கிரத்திலேயே அங்கு இருட்டிவிடுகிறதாம்.

பறவைகள் அலறல்: சாயங்காலம் 6 ஆகிவிட்டால், காற்று வேகமாக வீசுகிறதாம். அதுவும் சுழல் காற்று வீசுகிறது.. நாய்கள் நிறைய சுற்றி சுற்றி வருகின்றனவாம்.. பறவைகள் அலறல் காதைக் கிழிக்கிறதாம். சாலைகளில் பனி படர்ந்து மூடிக்கொள்கிறதாம்.

வெள்ளை உருவம்: சாலையின் குறுக்கே வெள்ளை கலரிலும், கருப்பு கலரிலும் மர்ம உருவங்கள் பல நடமாடுகிறதாம்.. விபத்தில் உயிரிழந்தவர்கள் இப்படி ஆவியாக நடமாடுவதாக, அந்த பகுதி மக்கள் பீதியில் சொல்கிறார்கள்.

இந்த சாலையை கடந்துதான், ஒயின்ஷாப்புக்கு செல்ல வேண்டும் என்பதால், குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு போகவே இல்லையாம். இதனால் டாஸ்மாக் உள்பட அங்கிருக்கும் கடைகளில் கூட்டமே இல்லாமல் காணப்படுகிறது. வெளியூர்க்காரர்கள் மட்டும் விஷயம் தெரியாமல், டாஸ்மாக் வந்து செல்கிறார்களாம்.

சாயங்காலம் 6 மணி ஆகிவிட்டாலே, விபத்து சாலையில் செல்ல பயமாக உள்ளதாகவும, வீட்டில் வாசப்படியிலேயே வேப்பிலையை கட்டி வைத்து, விளக்கேற்றி சாமி கும்பிடுவதாகவும் அம்மக்கள் கூறுகிறார்கள்.

ஆன்மா பூஜை: இந்நிலையில் நேற்றைய தினம், அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.. பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர். விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழிகளை பலி கொடுத்து வழிபாடு செய்துள்ளனர்.

நிஜமாகவே, இந்த சாலையில் வெள்ளை, கறுப்பு உருவங்கள் நடமாடுகிறதா? பேய் இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை. இப்படியான கட்டுக்கதைகளை யார் கிளப்பி விட்டு வருகிறார்கள் என்றும் தெரியவில்லை..

பறவைகள்: சாயங்கால நேரங்களில் பறவைகள் கிரீச்சிட்டு கூடுகளுக்கு திரும்புவது இயல்பான விஷயம்தான் என்றாலும், இதையும் பேயுடன் தொடர்புபடுத்துவது வேதனையை தருகிறது. அதுமட்டுமல்ல, மக்களிடமுள்ள இந்த பயத்தை பயன்படுத்தி, நிறைய சமூகவிரோத செயல்கள் அந்த சாலைகளில் நடக்க நிறையவே வாய்ப்புள்ளது..

அதனால், சம்பவ இடத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.. ஒளிரும் விளக்குகளையும் வழியெங்கும் பொருத்தி, பொதுமக்களின் அச்சத்தையும் மாவட்ட நிர்வாகம் போக்கினால் நன்றாக இருக்கும்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+