Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வா? விஷம பிரச்சாரம் என்கிறார் சேகர் பாபு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத்துறையில் வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள் என்றும் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tiruchendur temple Dharsan Fees high? P K Sekar Babu says it is a poisonous campaign

வரும் 18ஆம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருக்கோவிலில் தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை இந்து சமய அறநிலையத்துறை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாளிதழ்கள், இணைய தளங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.100ல் இருந்து 1000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது. அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை மீது வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள். இந்த ஆண்டு அறுபடை முருகன் கோவில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திமுக ஆட்சியின் மீது விஷம பிரசாரத்தை செய்து வருகிறார்கள் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+