அடுத்தடுத்து 2 கொலைகள்.. ஒரே நாளில் திருவண்ணாமலையை கலவர பூமியாக மாற்றிய கோரம்
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாநகர் பகுதியில் ஒரே நாளில் இருவேறு அடிதடி சம்பவங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேடியப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராமு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று ராமலிங்கனார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் லோகேஷ் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராமு அவர்களை சமாதானம் செய்துள்ளார். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராமு இருவரையும் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து லோகேஷ் தன் சகோதரரான விக்னேஷிடம் கூறியுள்ளார். விக்னேஷ் தன் நண்பர்களான தினேஷ், அரவிந்த், அப்பு ஆகியோரை அழைத்துக் கொண்டு ராமுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ராமு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நிலைய விக்னேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் தினேஷ், அரவிந்த், அப்பு உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை கல்லூரி மாணவியும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்து (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். முத்துவின் நடவடிக்கை பிடிக்காமல் காதலி அவரை விட்டு விலகியுள்ளார். முத்து காதலியின் வீட்டுக்கே சென்று பிரச்னை செய்துள்ளார். அப்போது காதலி வெளியூர் சென்றுள்ளார்.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சுனில் உள்ளிட்ட 4 பேர் முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. கோட்டை முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 11 ஆம் வகுப்பு மாணவன் சுனிலின் இதயப் பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சுனிலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் நண்பனை குத்திய கோட்டை முத்துவை சுனில் நண்பர்கள் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கோட்டை முத்துவை கைது செய்து தீவிர விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துவுக்கு தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாநகராட்சியில் ஒரே இரவில் இன்ஸ்டா காதல் விவகாரம் மற்றும் தந்தை மகன் தகராறு விவகாரம் உள்ளிட்ட இரு வேறு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications