எல்கேஜி குழந்தை பாலியல் வன்கொடுமை! 30 நிமிடங்களில் தாளாளர் கணவரை தூக்கியது இப்படி தான்! பரபர தகவல்
திருவண்ணாமலை: தனியார்ப் பள்ளியில் எல்கேஜி படிக்கும் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. அதிலும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
குறிப்பாக மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. அப்படியொரு அதிர வைக்கும் சம்பவம் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 4.5 வயது சிறுமி யுகேஜி படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அப்பள்ளியின் தாளாளரின் கணவர் காமராஜ் என்பவர் சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலத்தையே அதிரச் செய்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விசாரணை
இந்த விவகாரம் பெரும் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி டாக்டர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை பறிமுதல் செய்த காவலர்கள், எல்கேஜி மாணவியின் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.

கைரேகை நிபுணர்கள்
குறிப்பாக யுகேஜி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் அறை உள்ளிட்ட இடங்களை போலீசார் பார்வையிட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவியின் வகுப்பு ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

30 நிமிடங்கள்
அதன் பின்னர் பேசிய அவர், "தனியார்ப் பள்ளியின் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு இன்று காலையில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்த 30 நிமிடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொலைப்பேசி சிக்னலை வைத்து தனியார்ப் பள்ளியின் தாளாளரின் கணவர் காமராஜை தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் வைத்து கைது செய்தோம்.

சிசிடிவி
இந்த விவகாரத்தில் தனியார்ப் பள்ளியின் தாளாளர் பிரபாவதியையும் கைது செய்துள்ளோம். இருவரையும் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து, தனித்தனியாக விசாரணை நடத்தவுள்ளோம். பள்ளியில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்களும் உள்ளன. அதை அடிப்படையாக வைத்தும் ஆய்வு செய்து வருகிறோம். ஒட்டுமொத்த பள்ளியும் இப்போது போலீசார் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

விசாரணை
பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களிடம் குறிப்பாக, வகுப்பு ஆசிரியர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திலும் இருந்து கைரேகைகளைச் சேகரிக்கும் பணிகளும் நடந்து வருகிறோம்" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications