Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலுங்கிய திருவண்ணாமலை.. 1.50 லட்சம் தொண்டர்கள்.. திறந்த வேனில் வந்த ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படியே முதல்வர் ஸ்டாலின் கூட்டத்திற்கு வருகை தந்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையையொட்டி திருவண்ணாமலையே விழாக்கோலம் பூண்டுள்ளது. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 91 தொகுதிகளை சேர்ந்த 1.5 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே பாக்கியிருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளன. பூத் லெவல் கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுடன் தலைமையில் இருந்து பேசி கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

tiruvannamalai-to-host-mega-dmk-youth-wing-meet-today-udhayanidhi-stalin-makes-announcement

திமுக நிர்வாகிகள் கூட்டம்

இத்தகைய முயற்சிகளில் ஆளும் திமுக, முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான், திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞர் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. மாலை 6 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் திறந்த வேனில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்படியில் உள்ள கலைஞர் திடலில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

Tiruvannamalai Udhayanidhi Stalin DMK

நிகழ்ச்சிக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tiruvannamalai Udhayanidhi Stalin DMK

ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

இந்த கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். சுமார் 1.50 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் படம் வைக்கப்பட்டன.

Tiruvannamalai Udhayanidhi Stalin DMK

பிரமாண்ட மேடையில் கூட்டம்

இந்த கூட்டத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு கூட்டம் நடந்து வருகிறது.

Tiruvannamalai Udhayanidhi Stalin DMK

1.50 லட்சம் பேர் பங்கேற்பு

இந்த கூட்டத்திற்கு 17 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதிகள் செய்யப்பட்டன. 2 லட்சம் பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டளன. சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் நிர்வாகிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட், ஸ்நாக்ஸ் ஆகியன அவர்களத் இருக்கையிலேயே வைக்கப்பட்டன. கூட்ட நெரிசல் இன்றி வந்து செல்ல புதிதாக இரண்டு சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Tiruvannamalai Udhayanidhi Stalin DMK
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+