Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையில் திடீர் சிக்கல்.. ஆனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைய ஒரு மாற்றம்.. என்ன நடந்தது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஒரு பெரும் சிக்கலுக்கு, கோயில் நிர்வாகம் இப்போது அதிரடியான மாற்றுத் தீர்வு ஒன்றைக் கண்டுள்ளது.. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தால் கோயில் பிரசாத தயாரிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தடையை முறியடிக்க, ஒரு பாரம்பரிய முறையை நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.. இதனால் அண்ணாமலையார் பக்தர்கள் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. அது என்ன தெரியுமா?

திருவண்ணாமலை அண்ணாமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாக விளங்குகிறது..

tiruvannamalai news temple update tamil devotees surprise tamil breaking news spiritual tamil news temple latest update annamalaiyar temple viral tamil news tamil trending news

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக நம்பப்படும் இந்தத் தலத்தில், யுகங்கள் கடந்தும் அழியாத மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.. குறிப்பாக பங்குனி மாத பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.. கோயில் நிர்வாகம் சார்பில் நேரடியாகத் தயாரிக்கப்படும் இந்த லட்டுகள் மட்டுமின்றி, அதிரசம் மற்றும் முறுக்கு போன்ற பிரசாதங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

திருப்பதி போல லட்டு பிரசாதம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் பின்பற்றி, அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை நீண்ட காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

இதுதவிர, கோயில் நிர்வாகத்தால் தயாரிக்கப்படும் முறுக்கு, எள் அடை, அதிரசம் உள்ளிட்ட எண்ணெய் பலகாரங்கள் அடங்கிய பாக்கெட்டுகள் 50 ரூபாய் விலையிலும், புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் தலா 10 ரூபாய் என்ற குறைந்த விலையிலும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.. இந்த நடைமுறை பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

இந்த சூழலில், சர்வதேச அளவில் நிலவும் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.. குறிப்பாக வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், திருவண்ணாமலை கோயிலில் லட்டு தயாரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு தயாரிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் கோயில் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.. மேலும் விற்பனைக்காகத் தயார் செய்யப்படும் இதர பிரசாத விநியோகமும் முழுமையாக நிறுத்தப்பட்டது பக்தர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீரான பிறகே மீண்டும் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது..

விறகு அடுப்பு தீர்வு - பக்தர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.. அதன்படி, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புகளை பயன்படுத்தி லட்டு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் விறகு அடுப்புகள் அமைக்கப்பட்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டது.. இதன் விளைவாக, நேற்று காலை முதல் மீண்டும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது பிரசாத விற்பனை நிலையத்தில் புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவை மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இன்னும் முழுமையாகச் சரியாகாத காரணத்தால் லட்டு, அதிரசம், முறுக்கு மற்றும் மிளகு வடை போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தயாரிக்க முடியாத நிலை நீடிக்கிறது.. இதனால் இந்தப் பலகாரங்களின் விற்பனை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+