திருவண்ணாமலையில் கோவில் கொடிமரம் அருகே வந்த விஐபிக்கள்.. ஆந்திர குடும்பத்தினருக்கு என்ன நடந்தது?
திருவண்ணாமலை: வழக்கத்தைவிட கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர யூடியூபர்களின் தொடர்ச்சியான வீடியோக்களால் திருப்பதிக்கு நிகராக திருவண்ணாமலைக்கு தெலுங்கு மக்கள் படைஎடுப்பது அதிகரித்துள்ளது. அப்படி வார இறுதியில் வந்த ஆந்திர மாநில பக்தர்கள் விஐபி தரிசன வழியில் செல்வதற்கு முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும், கோவில் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அழுது கொண்டே கடந்து சென்று தரிசனம் செய்துவிட்டு ஆந்திர மாநில குடும்பத்தினர் வெளியே சென்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ் பெற்ற சைவத் தலங்களில் முதன்மையானது. இங்குள்ள மலை அருணாசல மலை என்று அழைக்க காரணம் உள்ளது. 'அருண' என்றால் சிவப்பு, 'அசலம்' என்றால் மலை. இந்த மலையே சிவனின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிவலம்
பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலையைச் சுற்றி நடக்கும் 'கிரிவலம்' மிகவும் பிரசித்தி பெற்றது. இது மனதிற்கும் உடலுக்கும் பெரும் அமைதியைத் தரும் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகங்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் கிழக்குக் கோபுரம் சுமார் 217 அடி உயரம் கொண்டது. இது தமிழகத்தின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். கோவிலின் நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமான கோபுரங்கள் அமைந்துள்ளன, இவை பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் கட்டிடக்கலைத் திறனுக்குச் சான்றாக உள்ளன. சிவபெருமான் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய இடம் இதுதான் என்று புராணங்கள் கூறுகின்றன.
மகா தீபம்
கார்த்திகை மாதத்தில், கோவில் உச்சியில் ஏற்றப்படும் 'மகா தீபம்' உலகப் பிரசித்தி பெற்றது. அந்த நேரத்தில் மலை முழுவதும் பல்லாயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு, நகரம் முழுவதும் ஜோதி மயமாய்க் காட்சி அளிக்கும். உலகப்புகழ் பெற்ற ரமண மகரிஷி வாழ்ந்த இடம் இது. இப்போதும் அவர் வாழ்ந்த ஆசிரமம் திருவண்ணாமலையில் பக்தர்களை ஈர்க்கிறது. மேலும், இது பல சித்தர்கள் தவமியற்றிய புண்ணிய பூமியாகும்.
ஆந்திர பக்தர்கள்
இது அக்னி ஸ்தலம் என்பது ஆந்திராவில் யூடியூபர்களால் அண்மைக்காலத்தில் ஏக பிரபலம் ஆனது. ஆந்திரா தெலுங்கானாவில் திருவண்ணாமலை கிரிவலம் என்பது பலருக்கு ஆன்மீக ரீதியாக விருப்பமான ஒன்றாக மாறி உள்ளது. எப்படி என்றால் பல தெலுங்கு மக்கள் தினமும் வந்து செல்லும் அளவிற்கு மாறி உள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர பக்தர்கள் எண்ணிக்கைமிக அதிகமாகி வருகிறத.
பக்தர்கள் அதிகம்
பொதுவாவ திருவண்ணாமலையில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து, பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
7 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜகோபுரம் வழியாக நீண்ட நேரமாக காத்திருந்து கியூ லைன் மூலமாக கோவில் கொடிமரம் அருகே வந்துள்ளனர், அப்போது கோவிலில் பணிபுரியும் காவலர் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க ஐந்து நபர்களை விஐபி தரிசனத்திற்காக குறுக்கு வழியில் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
கலங்கிய ஆந்திர பக்தர்கள்
அப்போது கியூ லைனில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில குடும்பத்தினர் 5 பேர் நாங்களும் இந்த வழியில் வருகிறோம் என்று காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் ஆந்திர மாநில பக்தர்களுக்கும் காவல்துறை மற்றும் கோயில் பணியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திர மாநில பக்தர்கள் அழுது கொண்டே அங்கிருந்து கலைந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பக்தர்களிடையே மனக்கசப்பையும் ஏற்படுத்தியது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications