மாத்திரை வடிவில் திருமண அழைப்பிதழ் - திருவண்ணாமலை கல்லூரி உதவி பேராசியர் அசத்தல்!
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர், தனது திருமணப் பத்திரிகையை மாத்திரை அட்டை போன்று வடிவமைத்து வழங்கி வருகிறார். அவரது இந்த வித்தியாசமான அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது வருகிறது.
Recommended Video
பொதுவாக திருமண அழைப்பிதழ் என்றால், தெய்வங்களின் படம், உள்ளே குலதெய்வப் பெயர் மற்றும் உற்றார், உறவினர்கள் பெயர் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். பத்திரிகையை கவரில் வைத்து நான்கு முக்கிலும் மஞ்சள் தடவி கொடுப்பதை சிலர் ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர். திருமண அழைப்பிதழை கொடுக்கச் செல்வதே ஒரு வைபவம் மாதிரி நடைபெறும். முதல் பத்திரிகை குலதெய்வத்திற்கும், இரண்டாவது பத்திரிகை தாய்மாமனுக்கு என்றும் கொடுப்பதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனால், வேகமாக மாறி வரும் காலசூழலில், ஒருசிலர், அழைப்பிதழ்களை தபாலிலும், கூரியர்களிலும் அனுப்பிவிட்டு, வாட்ஸ் அப் மூலம் திருமணத்திற்கு வாங்க என்று, மெசேஜ் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள். மேலும் ஒருசிலர், விதவிதமான கோணங்களில் திருமண அழைப்பிதழை அச்சடித்து அசத்தி வருகின்றனர். அப்படியொரு வித்தியாசமான திருமணப் பத்திரிகையை, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் அச்சடித்து, அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த எழில் என்ற எழிலரசன் என்பவர், அதே பகுதியில் சேர்ந்த வசந்தா என்கின்ற வசந்தகுமாரி என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி இரவு வரவேற்பும், மறுநாள் காலையில் திருமணமும் நடைபெற உள்ளது.
எழிலரசன் தனது திருமண அழைப்பிதழை, வித்தியாசமான முறையில், மாத்திரை அட்டை வடிவில் அச்சடித்து, அனைவருக்கும் வழங்கி வருகிறார்.
மாத்திரை அட்டையின் பின்புறம் மருந்தின் பெயர், டோஸ் அளவு, தயாரிப்பு இடம், காலாவதி தேதி ஆகியவற்றை மாற்றி, மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் எழில்வசந்தா-செப்-05 என தனது வருங்கால மனைவி பெயரைச் சேர்த்து திருமண நாளான செப்பம்பர் 05ஐயும் இணைத்துவிட்டார். மாத்திரையின் மூலப்பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெயரும், அவர்களது கல்வி விவரங்கள், வேலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நீல நிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் விவரங்களை தந்துள்ளார்.
மாத்திரையின் நிறங்கள் பற்றிய இடத்தில், லவ்லி ரெட் ஹார்ட் என குறிப்பிட்டுள்ளார். மாத்திரையின் தயாரிப்பு விவரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெற்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் புதுமையான திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது வருகிறது. மேலும், எழிலரசனை, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications