திருவண்ணாமலை அருகே வீட்டு மனையால் வந்த வில்லங்கம்.. வீட்டு வாசலில் ஜோதிக்கு இப்படியாக ஆகணும்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சின்ன புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தஜோதி. அவரது மனைவி ஜோதி (வயது 44). இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஜெயபால் மகன் சுரேஷ் (38). இருவருக்கும் இடையே வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று காலை ஜோதிக்கும், சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சுரேஷ் செய்த காரியத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டுமனை வாங்குவோர் சரியான அளவுகளில் வீட்டு மனை உள்ளதோ, பக்கத்து நிலத்தின் அளவும், தங்கள் நிலத்தின் அளவும் சரியானபடி உள்ளதா, பட்டாவில் ஒரு அளவு, பத்திரத்தில் ஒரு அளவு உள்ளதா என்பதை கவனமாக கவனிக்க வேண்டும். பக்கத்து இடத்தில் வீடு கட்ட போகிறார்கள் என்றால், அதற்கு முன் அளவுகளை சரிபார்த்துவிடுவது நல்லது.

tiruvannamalai home land

சில நேரங்களில் பக்கத்து இடத்தில் உள்ளவர்கள் அதிகமாக இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டால், தீராத தலைவலியாக மாறிவிடுகிறது. இப்படி வீடு கட்டியவருக்கும் பின்னாளில் பெரும் சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளது. பலர் பட்டா வந்துவிட்டது, பத்திரம் வந்துவிட்டது என்று கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் பத்திர அளவும், பட்டா அளவும் சரியாக உள்ளதா என்பதை கவனிப்பது இல்லை.. சில நேரங்களில் பத்திரம் சரியாக இருக்கும்.

பட்டா வாங்காமல் விட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் பல வருடம் கழித்து பட்டா வாங்க போகும் போது தான் பக்கத்து வீட்டு மனைக்கு அதிக இடம் தந்து பட்டா வாங்கியிருப்பது தெரியும். இடம் காலியாக இருந்தால் சரி செய்துவிட முடியும். இல்லாவிட்டால்சிக்கல் தான். நீதிமன்றத்தில் முறையிட்டு சிவில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.. சில நேரங்களில் தகராறு முற்றி சண்டைகளும் ஏற்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே வீட்டுமனை தகராறில் பெண் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சின்ன புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவருடைய மனைவி ஜோதி (வயது 44). இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கிறார் ஜெயபால் மகன் சுரேஷ் (38).

இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று காலை ஜோதிக்கும், சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சுரேஷ் ஜோதியை கத்தியால் தலையில் வெட்டினாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆரணி டிஎஸ்பி பாண்டேஸ்வரி, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர். வீட்டுமனை தகராறில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+