கையில பணத்தை கொடுங்க.. அரசு வேலை வாங்கி தரேன்.. மொத்தமாக விபூதி அடித்த பாஜக நிர்வாகி.. அதிரடி கைது!
திருவாரூர்: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் (56) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பல கட்டங்களாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ராஜேந்திரன்.
ஆனால், இதுவரை வேலை வாங்கித் தராத நிலையில், பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சாந்தி. ஆனால், ராஜேந்திரன் பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த பாஜக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தவல்லி என்பவரிடமும் இதேபோல ராஜேந்திரன், அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பாஜக நிர்வாகி மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications