மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன்.. மின்சாரம் தாக்கி பலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் மாடியில் பந்து விளையாடிய போது, மின்சாரம் பாய்ந்து, சிறுவன் பலியானான். இது தொடர்பான சிசிடிவி காட்சியில் இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் உள்ள நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நேற்று சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப் பிடிக்க முயன்றுள்ளான்.

Child died due to current shock during playing cricket in Thiruvarur, CCTV footage released

அந்த நேரத்தில் அச்சிறுவனின் கை, மாடியை ஒட்டி உரசியவாறு செல்லும் மின் கம்பியில் பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து, அந்த சிறுவன் மாடியிலிருந்து துடிதுடித்து உயிரிழந்தான். மேலும் உயிரிழந்த அச்சிறுவன் மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

அந்த சிறுவன் கீழே விழுந்தவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று அவனைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து விட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் மாடியிலிருந்து விழும் காட்சி கீழிருக்கும் கடையில் உள்ள சிசிடிவியல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+