திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹலோ.. மணிமேகலையா? சட்டென போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்.. எதுவும் பிரச்சனையா? விசாரணை! யார் இவர்?

Google Oneindia Tamil News

திருவாரூர்: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.

வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை.. வெள்ள பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்? செப்.26ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை'

செயலி

செயலி

பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ள காலை உணவு திட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு சார்பாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சி.எம்.13.எப்.எஸ் என்று இந்த செயலிக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் உணவு நேரத்திற்கு வழங்கப்படுகிறதா, மெனு சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க முடியும். முக்கியமாக இந்த திட்டத்தில் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். இதையும் இந்த ஆப் மூலம் கண்காணிக்க முடியும்.

விளக்கம்

விளக்கம்

இந்த ஆப் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் இன்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை செய்தார். ஆலோசனை தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அவருக்கு போன் செய்த முதல்வர், வணக்கம்மா.. ஸ்டாலின் பேசுறேன்.. காலை உணவு திட்டம் தொடர்பா பேசுறேன். மணிமேகலை தானே? நீங்க எந்த ஏரியா பார்க்குறீங்க?

விசாரணை

விசாரணை

நீங்க எந்த ஸ்கூல் பார்க்குறீங்க?.. (ஸ்கூல் பெயரை சொல்கிறார்).. அப்படியா சரி சரி.. சாப்பாடு சரியான நேரத்திற்கு தயாரானதா? சரியான நேரத்திற்கு வந்துவிட்டதா? சாப்பாடு எத்தனை மணிக்கு கொடுக்கப்பட்டது? மாணவர்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டார்களா? இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா? எல்லாம் சரியாக இருக்கிறதா? ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் ? என்று கேட்டார். முதல்வர் கேட்ட கேள்விக்கு எல்லாம் சத்துணவு பணியாளர் மணிமேகலை விளக்கம் அளித்தார். அதன்பின் அவர் போனை தலைமை ஆசிரியர் சுமதியிடம் கொடுத்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தலைமை ஆசிரியர் சுமதி பேசுகையில் அவரிடமும் ஸ்டாலின் கேள்வி கேட்டார். எத்தனை பேருக்கு ஒரு நாளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது? 36 பேருக்கா.. சரி சரி.. 36 பேருக்கும் தினமும் உணவு செய்கிறீர்களா அல்லது எண்ணிக்கை மாறுமா? எதுவும் பிரச்சனை இல்லை. பார்த்து செய்யுங்கள். நன்றி, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அதன்பின் அதிகாரிகளும் திட்டம் செயல்படும் விதம் பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.

English summary
CM Stalin called a school executive to check on the breakfast scheme for school students .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X