ஊர் கூடி தேர் இழுப்போம்.. கஜா சூறையாடிய இந்தப் பள்ளிக்கு கை கொடுங்கள்!
திருவாரூர்: கஜா புயல் தாக்கி விட்டு ஓடி விட்டது. எப்படி எழுந்து நிற்பது என்று தெரியாமல் காவிரி டெல்டா மாவட்டங்கள் தடுமாறிக் கொண்டுள்ளன.
நிவாரணப் பணிகள் இன்னும் பல காலத்துக்குத் தொடர்ந்தாக வேண்டிய நிலையில்தான் டெல்டா மாவட்டங்கள் உள்ளன. தற்போது பல்வேறு ஊர்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளன.
இவற்றை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பெருமளவில் மக்கள் உதவி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு பள்ளியைப் பற்றித்தான் இதில் பார்க்கப் போகிறோம்.

வித்வான் பள்ளி
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது வித்வான் மானைக்கால் உதவி தொடக்கப்பள்ளி. இது ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகும். இதனை இப்பகுதி மக்கள் ரேவதி ஸ்கூல் என்றே அழைப்பார்கள். இது 1955ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

கடும் சேதம்
சமீபத்தில் நிகழ்ந்த கஜா புயலால் இந்த பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி திருத்துறைப்பூண்டியில் உள்ள அண்ணா நகரில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர்.

உதவி தேவை
இப்பகுதி ஏழை, எளிய மக்கள் படிக்கும் இந்த பள்ளியை சீரமைக்க உங்கள் உதவி தேவை. தற்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமர்ந்து தங்கள் படிப்பை தொடருவது வேதனையான விஷயமாகும்.

நீங்களும் உதவலாம்
இந்தப் பள்ளியை சீரமைக்க உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் ஆசைத்தம்பி சரவணன் - 9715280151.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications