பிரபல ஓட்டலில் பொடி தோசை சாப்பிட்டாராம் திருவாரூர் பிரவீன்.. இப்ப மன்னார்குடியே பரபரக்குது.. ஓ காட்
திருவாரூர்: மன்னார்குடி பிரவீன்குமார் பொடி தோசை ஆர்டர் செய்தாராம்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா? திருவாரூரில் ஒரே பரபரப்பாகிவிட்டது. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருககிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. ஆனால், டெலிவரி அனுபவங்கள்தான், மிகவும் மோசமானதாக இருப்பதாக புகார்கள் எழுந்துபடி உள்ளன.

சிலசமயம், நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறொரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது.. அல்லது நாம் ஆர்டர் செய்த பொருளே இல்லாமல், வெறும் பார்சல் டெலிவரி செய்யப்பட்ட அனுபவங்களும் நடந்துள்ளன.. சில சமயம், பார்சலுக்குள் உயிரினங்கள் இறந்துகிடப்பதையும் காண முடிகிறது. இது தொடர்பான புகார்களும் அடிக்கடி எழுந்துவருவதால், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர்: இதோ நேற்றுகூட மன்னார்குடியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்பி சிவம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்.. 23 வயதாகிறது.. வடசேரி சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே புத்தக கடை ஒன்றை வைத்திருக்கிறார்.
இவர் கடையை திறந்ததுமே ஆன்லைனில் பிரபல உணவு நிறுவனத்தின் "ஆப்" மூலம் பொடி தோசை ஆர்டர் செய்திருக்கிறார்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மன்னார்குடியில் உள்ள அந்த பிரபல சைவ உணவகத்தில் இருந்து பொடி தோசையும் வந்திருக்கிறது..
எரிச்சல்: ஆசை ஆசையாக பார்சலை பிரித்து பிரவீன்குமார் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது பொடி தோசையில் பாதி அளவில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. அதாவது, பாதி பூரானை அவர் கடித்து சாப்பிட்டிருக்கலாம். அதுதான் தொண்டையில் எரிச்சலை தந்துள்ளதாக தெரிகிறது.
பிறகு பிரவீன் குமாருக்கு வாந்தி ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. கடைக்கு அப்போது வந்திருந்த கஸ்டமர்கள் இதை பார்த்து பதறிப்போய், பிரவீன்குமாரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆய்வு: இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுவேல் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.. அப்போது, ஓட்டலிலிருந்த உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றனர்.. பொடி தோசையில் பூரான் இறந்து கிடந்த சம்பவம் மன்னார்குடியையே பரபரப்பாக்கிவிட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications