திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் கோட்டையான திருவாரூர் தொகுதியில் இவர்கள்தான் அதிகமாமே!

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூருக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருவாரூர் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இதையடுத்து அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏ போஸும் காலமாகிவிட்டார். இதனால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இந்நிலையில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியானதாக உள்ளது. இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் என்ற கேள்வி எழுந்தது.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

இந்நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

பெண் வாக்காளர்கள்

பெண் வாக்காளர்கள்

திருவாரூர் சட்டசபை தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 3 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

ஒன்றியங்கள்

ஒன்றியங்கள்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

English summary
Female voters are higher than male voters in Thiruvarur Assembly Constituency. The byelection is going to conducted on January 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X