நிலவை சுற்றி தெரிந்த ஒளிவட்டம்.. வியந்த திருவாரூர் மக்கள்.. இதுதான் ‛மூன் ஹாலோ’.. அப்படினா என்ன?
திருவாரூர்: திருவாரூரில் நேற்று இரவில் நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. ‛மூன் ஹாலோ' என அழைக்கப்படும் இந்த நிகழ்வை பலரும் ஆச்சரியமாக கண்டு ரசித்த நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
வானில் தினமும் ஏராளமான அரிய நிகழ்வுகள் நடக்கின்றன. இதில் சிலவற்றை நம்மால் பார்க்க முடியும். இதுதவிர பல நிகழ்வுகள் நம் கண்ணுக்கு தெரியாமலே நிகழ்ந்து முடிந்து விடும்.

குறிப்பாக நிலவை அடிப்படையாக கொண்ட சந்திரகிரகணம், ப்ளூ மூன் உள்பட பல்வேறு நிகழ்வுகளை வானியல் அறிஞர்கள் முன்கூட்டியே கண்டறிந்து நமக்கு தெரிவிப்பதால் நாம் அதனை பார்க்க முடியும்.
இதுதவிர வானில் திடீரென்று பல்வேறு சம்பவங்கள் நடப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் தான் நேற்று திருவாரூர் மக்கள் முக்கிய நிகழ்வை பார்த்தனர். அதாவது நேற்று இரவு திருவாரூரில் நிலவை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. நிலவை சுற்றி பிரகாசமாக அந்த ஒளிவட்டம் இருந்தது.
பொதுவாக இரவில் நிலவு மட்டுமே தெரியும் நிலையில் நேற்று ஒளிவட்டம் தோன்றியது. இதனை திருவாரூர் மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிகழ்வை பலரும் தங்களின் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்தனர். இது தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

திருவாரூரில் நேற்று நிலவை சுற்றி தோன்றிய ஒளிவட்டம் என்பது அதிசய நிகழ்வு ஒன்றும் அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வரும் ஒன்று தான். அதாவது நிலவு ஒளியானது, வானத்தில் மேல் மண்டலத்திலுள்ள பனி படிகங்கள் மீது படுகிறது. இது கண்ணாடியைப் போல் செயல்பட்டு ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நிலவை சுற்றி வட்டம் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் ஒளி வட்டம் சில இடங்களில் வெள்ளை நிறத்திலும், வானவில் போன்ற நிறத்திலும் இருக்கும்.
இந்த ஒளிவட்ட நிகழ்வு என்பது நிலவுக்கு மட்டும் இல்லை. சில நேரங்களில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஏற்படுவதுண்டு. மேலும் இந்த ஒளிவட்டத்தை வைத்து சில இடங்களில் கட்டுக்கதைகளும் பரப்பப்படுவது உண்டு. வானில் நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றினால் அது மோசமான வானிலையின் அறிகுறி என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அது முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். வெறுமனே இந்த நிலவின் ஒளிவட்டத்தை வைத்து மட்டும் மோசமான வானிலை உருவாகும் என்று சொல்லிவிட முடியாது என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications