மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம்.. நடுரோட்டில் மாணவி மற்றும் சகோதரியை தாக்கிய பாஜகவினர்!
திருவாரூர் : மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கிய மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா மற்றும் அவரது அக்கா நந்தினி ஆகியோரை திருவாரூரில் பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா மற்றும் அவரது சகோதரி நந்தினி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.

நாட்டை பற்றி சிந்திப்போம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகளுக்கு நந்தினியும், நிரஞ்சனாவும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.
இதை பற்றி கேள்விப்பட்ட உடன் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனே அங்கு சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படி நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கலாம் என்று பாஜகவினர் சத்தம் போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது.

நந்தினி மற்றும் நிரஞ்சனாவை பாஜகவினர் தாக்கினார்கள், பதிலுக்கும் அவர்களும் பாஜகவினரை தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த தகவலை அறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவி நிரஞ்சனா மற்றும் நந்தினியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications