விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை.. ஓஎன்ஜிசி வழக்கில் திருவாரூர் கோர்ட் அதிரடி
திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக பிஆர் பாண்டியன் உள்ளார். இந்நிலையில் தான் 2015ம் ஆண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். விவசாயிகள் நலன் சார்ந்து ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல்வேறு விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த 2015ம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
இதற்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்பினர் போராட்டம், உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர். அப்போது பிஆர் பாண்டியன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இருப்பினும் இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த வழக்கில் இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது பிஆர் பாண்டியனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications