1 நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்.. 4 ஆண்டுகளில் பல கோடி.. விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க.. திருவாரூரில் விஜய்
திருவாரூர்: திருவாரூரில் பேசிய விஜய், விவசாயிகளிடம் இருந்து இந்த திமுக அரசு கமிஷன் அடித்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக, ஒரு நெல் மூட்டைக்கு அரசாங்கம் கொடுக்கிற ₹10 போக கூடுதலாக ₹40 கமிஷன் அடிக்கிறார்கள் என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளில் பல கோடி ரூபாய் விவசாயிகளிடம் இருந்து கமிஷன் அடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாகையை தொடர்ந்து, இன்று மாலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டு தேரை நகர விடாமல்
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. திருவாரூர் என்றாலே திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடித்தேர்தான் உடனே மனுஷனுக்கு வரும். திருவாரூர் தேரென்றால் சும்மாவா வாங்க... இந்த மண்ணோடைய அடையாளம் ஆச்சே. ரொம்ப நாட்களாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்தது நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் நபர் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் அவரோட மகன், மாண்புமிகு சிஎம் சார் இப்போ என்ன செய்றாங்க? நல்லா ஓடும் தமிழ்நாடு என்ற தேரை நான்கு பக்கமும் கட்டையடிச்சு நிப்பாடி, ஆடாமல் அசையாமல், அப்படியே நிப்பாட்டிவிட்டார் ஸ்டாலின். இதை பெருமையாக வேற சொல்லிக்கொள்கிறார். திருவாரூர் மாவட்டம் தான் அவர்கள் சொந்த ஊராக சொல்லிக்கொள்கிறார். ஆனால் திருவாரூர் கருவாடா காய்ந்து கிடக்கிறது. நாகையைப் போல் திருவாரூரிலும் அதிகமாக குடிசைப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கிறார்
எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க. மெரினாவில் உங்க அப்பாவுக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என்று சொல்றீங்க. ஆனால் உங்க ஊர் என்று சொல்லிக்கொள்ளும் திருவாரூரில் சாலை வசதிகள் நல்லா இருக்கா? இங்க இருக்கிற பல்கலைக்கழகத்தில் எல்லா வசதிகளும் இருக்கா? இங்கே இருக்கிற மெடிக்கல் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கின்ற கண்டிஷனில்தான் இருக்கு. திருவாரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு நல்ல சாலை கூட கிடையாது.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னன்னு தெரியுமா? சிஎம் சார் குடும்பத்துக்கு சேவை செய்வது தான். அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் உணர்த்துவோம். "உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்" என்று நீங்க மட்டும் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் கிடையாது, குடும்பத்துடன் ஸ்டாலின்.
விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன்
டெல்டா விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். அது என்ன என்றால், நெல் கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்குவதற்கு ஒரு மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குகிறார்கள். அரசே ₹10 கொடுக்கும் போதும், இவர்கள் கூடுதலாக ₹40 கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு டன்னுக்கு ₹1,000 கமிஷன் வாங்குகிறார்கள். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்க என்றால், பல கோடிகள் கமிஷனாக புடுங்கி இருக்கிறார்கள்.
இதை வேறு யாரும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டாங்க சிஎம் சார்.. இதை உங்க ஆட்சியில் நடந்து இருக்கிறது. உங்களுக்கு வேண்டும் என்றால் "40க்கு 40" என்பது எலக்ஷன் ரிசல்ட் ஆக இருக்கலாம். ஆனால் இங்கே உள்ள விவசாயிகளுக்கு "40க்கு 40" என்பது விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன். இவ்வாறு விஜய் பேசினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications