திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் அதிக நபர்களுக்கு வேக்சின்.. மன்னார்குடியில் கலக்கும் "ராஜா".. தமிழகத்திலேயே ரெக்கார்ட்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: தமிழகத்திலேயே நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேக்சின் போடும் பணிகள் வேகம் எடுத்துள்ளது. கடந்த வாரங்களில் மக்கள் இடையே வேக்சின் எடுத்துக்கொள்ள லேசாக ஆர்வம் வந்தது. இந்த நிலையில் தற்போது வேக்சின் எடுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,23,915 வேக்சின் போடப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வேக்சின் போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்செங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வேகம்

வேகம்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இருக்கிற வேக்சின்களை வேகமாக செலுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தில் அடுத்த 3-4 மாதங்களில் 4 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கும். தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கீடு இன்னும் அதிகமாக செய்யப்பட்டால், 2 மாதங்களிலேயே 4 கோடி பேருக்கு வேக்சின் போட முடியும்.

வேக்சின் எப்படி

வேக்சின் எப்படி

தொகுதி வாரியாக வேக்சின் ஒதுக்கப்பட்டு, மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக மயிலாடுதுறை என்ற தொகுதியை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு என்று 2000-3000 வேக்சின் ஒதுக்கப்பட்டு, அது 200 டோஸ்களாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளில் வைத்து மக்களுக்கு கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியா என்று சுழற்சி முறையில் தொகுதி முழுக்க வேக்சின் சென்று சேரும் வகையில் வேக்சின் கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு

சிறப்பு

இதில்தான் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதி புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று மன்னார்குடியில் ஒரே நாளில் 2691 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேக்சின் தொகுதி வாரியாக போடப்பட தொடங்கியதில் இருந்தே சராசரி வேக்சின் விநியோகம் 1062தான். நேற்றும் மன்னார்குடி தவிர மற்ற தொகுதிகளில் எல்லாம் சராசரியாக 1062 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது.

வேக்சின் எப்படி

வேக்சின் எப்படி

ஆனால் மன்னார்குடியில் மற்ற தொகுதிகளின் சராசரியை தாண்டி 2691 பேருக்கு வேக்சின் நேற்று ஒரே நாளில் போடப்பட்டு புதிய ரெக்கார்ட் படைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று தமிழகத்தில் மொத்தமாக போடப்பட்ட வேக்சின்களில் கிட்டத்தட்ட 1.08% வேக்சின் மன்னார்குடியில் இருந்து போடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட சுமார் 250% கூடுதலாக நேற்று மன்னார்குடியில் மட்டும் வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின்

வேக்சின்

மின்னும் மன்னை என்ற திட்டத்தின் கீழ் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா வேக்சின் போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மன்னார்குடியில் தினமும் பல ஏரியாக்களில் கேம்ப் போடப்பட்டு 200-300 பேருக்கு கேம்ப் வாரியாக வேக்சின் அளிக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடி மட்டுமின்றி மன்னார்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கூட வேக்சின் போடப்படுகிறது.

Recommended Video

    Corona Vaccine | சாதித்த தமிழக அரசு.. எப்படி சாத்தியமானது? | Oneindia Tamil
    எப்படி சாத்தியம்

    எப்படி சாத்தியம்

    உதாரணமாக தினமும் சராசரியாக 10-14 இடங்களில் வேக்சின் போடப்படுகிறது. மன்னார்குடியில் உள்ள பிரபல இடங்கள், அதனை சுற்றி இருக்கும் கிராமங்கள் என்று தொகுதிக்கு கீழ் வரும் எல்லா இடங்களிலும் கேம்ப்களை மாற்றி மாற்றி போட்டு, மக்களுக்கு வேக்சின் கிடைக்க டிஆர்பி ராஜா ஏற்பாடு செய்துள்ளார். அதிலும் சில கிராமங்களில் மக்கள் நேராக சென்று வேக்சின் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    கிராமங்கள்

    கிராமங்கள்

    பல கிராமங்களில் மக்கள் அச்சம் இன்றி விழிப்புணர்வோடு வேக்சின் போட்டுக்கொள்கிறார்கள். 18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் 200 பேருக்கும், 45+ வயது கொண்டவர்கள் 100பேருக்கும் என்று தினமும் பல கிராமங்களில் மன்னார்குடியில் வேக்சின் போடப்படுகிறது. இதே மாடலை மற்ற தொகுதிகளிலும் பின்பற்றினால் தமிழகம் விரைவில் வேக்சின் அளிப்பதில் புதிய ரெக்கார்ட் படைக்கும்!

    English summary
    Tamilnadu: Mannargudi in Thiruvarur reaches a new height yesterday in the state of Covid 19 vaccinations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X