Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தந்தை அன்பின் முன்னே’..! படுத்த படுக்கையாய் அப்பா! தாலி கட்டிய கையோடு மகன் செய்த நெகிழ்ச்சி செயல்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் :திருவாரூரில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் மருத்துவமனைக்கு வந்து தந்தையிடம் மகன் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    படுத்த படுக்கையாய் அப்பா! தாலி கட்டிய கையோடு மகன் செய்த நெகிழ்ச்சி செயல் - வீடியோ

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

    ஆனால், மணிகண்டன் தந்தைக்கு நேற்றைய முன் தினம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    மகனுக்கு திருமணம்

    மகனுக்கு திருமணம்

    ஒரு பக்கம் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தந்தையை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், செல்வமணியை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தந்தை செல்வமணி இல்லாமல் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்று அந்த நாள் முழுவதுமே மணிகண்டன் விரக்தியிலும், மன வருத்தத்திலும் சுற்றியுள்ளார்.

    தந்தை மருத்துவமனையில் அனுமதி

    தந்தை மருத்துவமனையில் அனுமதி

    இதையடுத்து, நாச்சியார்கோவிலில் உள்ள மண்டபத்தில் மணிகண்டனுக்கும், சுஜாலினி நண்பர்களின் ஆதரவுடன், மிகுந்த மன கவலையை சுமந்துகொண்டு திருமணத்திற்கு தயாரானார். இருந்தாலும், தன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறப் போகிறது என எண்ணி மணிகண்டன் மிகுந்த வேதனையடைந்தார்.

    மருத்துவமனையில் ஆசீர்வாதம்

    மருத்துவமனையில் ஆசீர்வாதம்

    இந்நிலையில், நேற்று நாச்சியார்கோவில் மணிகண்டனுக்கும், சுஜாலினிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.திருமணத்திற்கு பிறகு, உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணி இடம் ஆசிர்வாதம் பெற்றார்.

    உறவினர்கள் நெகிழ்ச்சி

    உறவினர்கள் நெகிழ்ச்சி

    இந்த நிகழ்ச்சி மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அப்போது எடுத்த இந்த வீடியோவை நண்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதோடு மணக்கோலத்தில் மருத்துவமனைக்கு வந்ததை பாராட்டி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+