திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலைன்னு சொல்லு.. திருவாரூர் இடைத்தேர்தல்.. இப்போதாவது ரஜினி அந்த அறிவிப்பை வெளியிடுவாரா?

நடிகர் ரஜினிகாந்த் நடக்க உள்ள திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன் தனது கட்சியை தொடங்கி தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தல் வந்துவிட்டது... இப்போதாவது ரஜினி அறிவிப்பை வெளியிடுவாரா?- வீடியோ

    திருவாரூர்: நடிகர் ரஜினிகாந்த் நடக்க உள்ள திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன் தனது கட்சியை தொடங்கி தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மிக முக்கியமான தொகுதியான திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாதம் நடக்க உள்ள இந்த தேர்தலில் தமிழக அரசியலில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

    ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

    அட எவ்வளவு வேகம்

    அட எவ்வளவு வேகம்

    ரஜினி இப்போதுதான் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தது போல இருந்தது. ஆனால் காலம் மிக வேகமாக சென்றுவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. இன்னும் அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அவரது ரசிகர்களும் அந்த அறிவிப்பிற்குத்தான் காத்து இருக்கிறார்கள்.

    தேர்தலுக்காக

    தேர்தலுக்காக

    இந்த நிலையில் திருவாரூர் தேர்தலுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவாரா என்ற கேள்வி உருவாகி இருக்கிறது. இந்த பொங்கலுக்கு அவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தது. அதேபோல் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்று கேள்வி உருவாகி இருக்கிறது.

    கட்சி நிற்குமா?

    கட்சி நிற்குமா?

    ரஜினி கட்சி தொடங்கும்பட்சத்தில் வேகவேகமாக தனது வேட்பாளரை அறிவித்து, தேர்தலை சந்திப்பாரா, இனியாவது தனது அதிரடியை ரஜினி காட்டுவாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். வரும் மே மாதம் நடக்க உள்ள, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு ''வார்ம் அப்'' போல இந்த தேர்தலில் வேட்பாளரை நிற்க வைத்து தேர்தலை சந்திப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    யாருக்காவது ஆதரவு

    யாருக்காவது ஆதரவு

    ஒருவேளை கட்சி தொடங்காமல் ரஜினி எதாவது கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்றும் அவரது ரசிகர்கள் கேட்கிறார்கள். முக்கியமாக பாஜக அல்லது அதிமுகவிற்கு தேர்தலில் ஆதரவாக குரல் கொடுத்து பிரச்சாரம் செய்ய வருவாரா என்று விவாதம் உருவாகி இருக்கிறது. தேர்தலுக்கு சரியாக 28 நாட்கள் உள்ள நிலையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Thiruvarur by-election 2019: What will be the Rajinikanth's stand on this election? is one of the biggest question in this election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X