திருவாரூர் தொகுதிக்கு ஜன. 28ல் இடைத் தேர்தல் !
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3ம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14.
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேதிகள் அறிவிக்கப்பட்டதால் இன்றில் இருந்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிறது.
இந்த தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக யாரை நிற்க வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications