4 வருட பகை.. மின் தடையால் ஆள் மாற்றி கொலை.. திருவாரூரை அதிர வைத்த கோரம்
திருவாரூர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருப்பதாக புகார் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருவாரூரில் 4 வருடங்களுக்கு முன்பு ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்காக பழிவாங்க திட்டமிட்டபோது மின் தடை காரணமாக ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவியரசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக பாஜக இளைஞரணியைச் சேர்ந்த காளிதாஸன் என்பவர் தான் கவியரசனை கொலை செய்திருந்தார்.

விசிக பிரமுகர் கொலை
இந்த அரசியல் கொலை மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக காளிதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் காரணமாக காளிதாஸ் கடந்த சில மாதங்களுக்கு சிறையில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
காளிதாசும் அதே அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்தவராவார். இதையடுத்து அந்தப் பகுதியில் அவர் சகஜமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது கவியரசன் நண்பர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கவியரசனின் கொலைக்கு அவர்கள் காளிதாஸை பழிவாங்க திட்டமிட்டனர். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பணி செய்து வரும் நந்தகுமார் என்பவருடன், காளிதாஸ் பேசி வந்துள்ளார்.
சொதப்பிய ஸ்கெட்ச்
இருவரும் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனடியாக கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை சுற்றி வளைத்துள்ளது. சுதாரிப்பதற்குள் அவர்கள் நந்தக்குமாரை படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "காளிதாஸ் சிறையில் இருந்து வெளி வந்ததில் இருந்தே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர்.
மின் தடை
அன்றைய தினம் அவர்கள் நெருங்கும்போது, மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனடியாக காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கொலையாளிகள் அடையாளம் தெரியாமல் நந்தகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளையராஜா, துரை ராஜ், ஹரிஹரன், மணி தேவா, தோனி, சிற்றரசன் ஆகிய 6 பேர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.
இதில் இளையராஜா என்பவர் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் மீது தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர். மின் தடையால் ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications