துரத்தி துரத்தி வந்த மேனேஜர்.. அரளி விதையை அரைத்து குடித்த தமிழ்செல்வி.. திருவாரூர் கொடுமை..!
துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது
திருவாரூர்: பாலியல் தொல்லை அத்துமீறிவிட்டதால், மன உளைச்சல் அதிகமாகி தமிழ்செல்வி அரளி விதை அரைத்து குடித்துவிட்டார்.. துப்புரவு தொழிலாளியான தமிழ்செல்வி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் நகர் பகுதியில், அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி.. 30 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்...

தூய்மை பணியாளர்
அதில் ஒருவர்தான் தமிழ்செல்வி.. தூய்மை பணியாளராக 5 வருடங்களாக இந்த பணியை அவர் பார்த்து வருகிறார்.. ஆனால், சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் என்பவர், தமிழ்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது... எத்தனையோ முறை எதிர்ப்பை காட்டியம் மேனேஜர் தொடர்ந்து டார்ச்சர் தந்துள்ளதாக தெரிகிறது.. ஒருகட்டத்தில் மேலிடத்துக்கு இதை புகாராகவும் கொண்டு போயுள்ளார் தமிழ்செல்வி,.

பாலியல் டார்ச்சர்
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்த தமிழ்ச்செல்வி, மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மயங்கி சரிந்துவிழுந்தார்.. இதை பார்த்து பதறி போன சக ஊழியர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோதுதான், தமிழ்ச்செல்வி விஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் நடந்த விஷயத்தை எல்லாம் போலீசில் சொன்னார்..

வாக்குமூலம்
"என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.. இதை பற்றி பல முறை என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு புகார் சொன்னேன்.. அவர்களும் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்தனர்.. ஆனால் இன்னைக்கு இன்று வேலையில் இருந்தபோது, என்னை முத்துசெல்வன் ஆபீசுக்கு வரசொன்னார்.. வேலை விஷயமாக இருக்கும் என்று நினைத்து சென்றேன்..

அரளி விதை
ஆனால் அங்கு என்னிடம் தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார்... அதனால்தான் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.. இதையடுத்து, தமிழ்ச்செல்வி திருவாரூர் போலீசில்புகார் தந்ததையடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications