திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    டிவிட்டரில் வைரலாகும் வீதிக்கு வாங்க ரஜினி| Trending hashtag against actor rajinikanth

    திருவாரூர்: இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    குடியுரிமை சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறிஸ்துவ, பார்சி, பௌத்த, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்கப்படும் என்பதே அந்த சட்டமாகும்.

    இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என கூறப்படுகிறது.

    தீர்மானம்

    தீர்மானம்

    இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது.

    3ஆவது நாள்

    3ஆவது நாள்

    இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் மறுக்கவே அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் மறியல் போராட்டத்தில் 3ஆவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

    அமல்

    அமல்

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றும் வரும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் புதுவை முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் இந்த அரசின் முதல்வராக இருக்கும் வரை சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த மாட்டேன் என அறிவித்துள்ளார்.

    தாய்கள்

    தாய்கள்

    அது போல் தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜனநாயக வழியிலான இந்த போராட்டம் தொடரும். ரஜினி காந்த் பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது. இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டையிலும் திருவாரூரிலும் என்னுடைய தாய்கள் அழைக்கிறார்கள்.

    வேல்முருகன்

    வேல்முருகன்

    உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமியம், இஸ்லாமிய மக்களையும் மதித்தால் இது மதசார்பின்மை நாடாக விட்டுக் கொடுக்கிற வாழ்க்கை முறை நீடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள். இந்த போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி முழு ஆதரவு கொடுக்கும். எங்களை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilaga Vazhvurimai Party Chief Velmurugan asks Will Rajinikanth come to Washermenpet?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X