ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய காதலன்.. கொட்டும் மழையில் தர்ணா செய்த பெண்.. பரபர சம்பவம்
திருச்செந்தூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருச்செந்தூர் அருகே உள்ள நயினார்பத்து பகுதியை சேர்ந்த விஜயா(26) . இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். பட்டபடிப்பு படிக்க செல்லும்போது திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் மருதூர் கரையைச் சேர்ந்த திருமணிகுட்டி என்பவர் விஜயாவை ஓர் ஆண்டுகளாக பின் தொடர்ந்து தீவிரமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

மறுப்பு
முதலில் திருமணிகுட்டி காதலை ஏற்க விஜயா மறுத்துள்ளார். ஆனால் தொடர் திருமணிகுட்டி விஜயா பின் சுற்றி இருக்கிறார். இதனையடுத்து திருமணிகுட்டியின் காதலை ஏற்றுக் கொண்ட விஜயாவும் திருமணி குட்டியை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

பிரச்சனை
இவர்களில் காதலில் பிரச்சனை இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் விஜயாவை தருமணிகுட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும் நாம் திருமணம் செய்து கொண்டதை யாரிடம் சொல்லக்கூடாது என்று விஜயாவிடம் சத்தியம் பெற்றுள்ளார். தன்னை தீவிரமாக காதலித்த காதலன் மீது நம்பிக்கை கொண்ட விஜயா இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

திருமணிகுட்டி
ஆனால் திருமணிகுட்டி விஜயாவை எப்படியாவது ஏமாற்றம் திட்டத்தில் இருந்துள்ளார். திருமணம் முடித்ததும் திருமணி குட்டி விஜயாவும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து தொலைபேசியில் பேசியும் வந்துள்ளனர்.இந்த நிலையில் விஜயாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் விஜயா தான் காதலிப்பது பற்றும் , ரகசிய திருமணம் செய்து கொண்டு பற்றியும் வீட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

திருமணிகுட்டி
இதை விஜயா குடும்பத்தினர் திருமணிகுட்டியிடம் காதல் விவகாரம் பற்றி கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த திருமணிகுட்டி விஜயாவிடம் நாம் காதலிப்பது யாருக்கும் சொல்லக்கூடாது என்று தெரிவித்தேன் எப்படி வீட்டில் சொல்லலாம் என கூறி விஜயாவை அதிகாரபூர்வமாக திருமணம் செய்ய முடியாது என தவிர்த்து வந்துள்ளார். இதனால் விஜயா குடும்பத்தினர் விஜயாவை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர்.

பரிதாபம்
குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் விஜயா திருமணி குட்டியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் திருமணி குட்டியோ விஜயாவிற்கு அடைக்கலம் கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். இரண்டு வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் விஜயா நடுத்தெருவுக்கு வந்துள்ளார். திருமணி குட்டி தன்னை கண்டு கொள்ளவில்லை என்பதால் விஜயா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் இருவரையும் அழைத்து பேசி உள்ளனர்.

தர்ணா
ஆனால் திருமணி குட்டி தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமணி குட்டிக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்த விஜயா இன்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இன்று விஜயா காதலன் திருமணிகுட்டி வீட்டின் முன்பு கொட்டும் மழையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் தெரிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications